தீராத நோய்கள் தீர 23/11/2022 கார்த்திகை அமாவாசையில் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும் எளிய மூலிகை பரிகாரம்!

sambrani-kuladheivam
- Advertisement -

பொதுவாக அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய பூஜை முறைகளை செய்வது வழக்கம். அது மட்டும் அல்லாமல் அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது போன்றவையும் செய்யப்படுகிறது. மேலும் அந்த நாளில் குலதெய்வம் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியான விசேஷமான இந்த அமாவாசை கார்த்திகை மாதத்தில் வருவதும் இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும். இந்த மாதத்தில் காலை 6.35 மணிக்கு துவங்கும் அமாவாசை திதியில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது ஐதீகம். தீராத பிணிகள் தீர கார்த்திகை அமாவாசையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் ஆன்மீக பதிவாக இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

தீராத நோய்கள் தீர குடும்பத்தில் அவ்வப்போது யாகங்களை மேற்கொள்வது வழக்கம். அந்த யாகங்களில் போடப்படும் சில பொருட்கள் ரொம்பவே தெய்வீக தன்மை கொண்டது. அது போல நம் வீட்டிலும் திருஷ்டிகள் கழிக்க சில பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இந்த பொருட்களை நாம் பயன்படுத்தி திருஷ்டி கழித்தால் நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய தரித்திரங்கள், பீடை விலகி, திருஷ்டிகள் கழிந்து நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் விலகி நோய் நொடிகள் அண்டாமல் இருக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை அமாவாசை தினத்தில் இதை மேற்கொள்வது இன்னும் சிறப்பு.

- Advertisement -

அமாவாசையில் முதலில் எந்த ஒரு பூஜைகளையும் மேற்கொள்வதற்கு முன்பு உங்களுடைய வீட்டில் முன்னோர்களாக இருக்கக்கூடிய இறந்து போனவர்களுக்கு முதலில் படையலிட்டு வழிபட வேண்டும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் கண்டிப்பாக செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய குடும்பமானது செல்வ செழிப்புடன் இருக்கும். காக்கைக்கு படையல் சோறு, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை என தானம் கொடுக்க வேண்டும்.

அந்த நாளில் யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. தவறான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. இறை வழிபாடுகளில் முழுமையாக உங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும். இது போல கார்த்திகை அமாவாசையில் செய்பவர்களுக்கு மனரீதியாகவும் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

சூரியன் மறைந்த பிறகு நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு ஒரு சிறிய திருஷ்டி போல இந்த மூலிகை பொருட்களை போட்டு கழித்து கொள்ளலாம். திருஷ்டி கழிப்பதற்கு முதலில் சாம்பிராணி புகையை எழுப்பி கொள்ளுங்கள். ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அதில் நன்கு தீயை மூட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அது கரி ஆனதும் அதில் நெருப்புத் தணல் எரியும். அதில் சாம்பிராணி புகை போடுவது போல கீழ் வரும் இந்த மூலிகைகளை நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் போட வேண்டும். இதனால் உண்டாகக்கூடிய புகை உங்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை கொடுக்கும்.

மேலும் வீட்டில் இருக்கும் தரித்திரம், பீடை, கண் திருஷ்டிகள், செய்வினை கோளாறுகள் மற்றும் எதிர்மறை சக்திகள் அனைத்தையும் விரட்டி அடிக்கும். கருங்காலி, நாயுருவி, வால்மிளகு, தேவதாரு, வெண்கடுகு, வால்மிளகு, மஞ்சள் கிழங்கு, சாம்பிராணி, குங்கிலியம், வலம்புரி, இடம்புரி ஆகிய இத்தனை மூலிகைகளையும் நீங்கள் கொஞ்சம் போல் எடுத்து அந்த நெருப்பு தணலில் இட்டு எரிய விட வேண்டும். இதன் மூலம் உருவாகக்கூடிய புகை உங்கள் வீடு முழுவதும் பரவ செய்ய வேண்டும். இதனால் அமாவாசை முடியும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இருளும் முடிந்து போய்விடும்.

- Advertisement -