கார்த்திகை மாதம் கடைசி நாள் வழிபாடு

sivan3
- Advertisement -

கார்த்திகை மாதம் என்றதுமே அது இறைவழிபாட்டிற்கு உரிய மாதம் என்று தான் நம்முடைய நினைவுக்கு வரும். இந்த மாதத்தில் வரிசையாக ஐயப்பன் சாமி, சிவன், பெருமாள், கார்த்திகை தீபம், முருகப்பெருமான், எல்லோருடைய வழிபாடும் நம்முடைய நினைவுக்கு வந்துவிடும். இந்த கார்த்திகை மாந்தமானது நாளை முடிவடையவிருக்கிறது.

அதாவது 16-12-2023 ஆம் தேதி கார்த்திகை மாதத்தில் கடைசி நாள், சனிக்கிழமை அன்று வரவிருக்கின்றது. இந்த கார்த்திகை மாதம் முழுவதும் நீங்கள் சில வழிபாடுகளை செய்திருக்கலாம். சில வழிமுறைகளை செய்ய முடியாமல் தவறி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, நாளைய தினம் இறைவழிபாட்டை கட்டாயம் செஞ்சிடுங்க.

- Advertisement -

இந்த கார்த்திகை மாதம் முழுவதும் இறைவனை வழிபாடு செய்த அத்தனை புண்ணியமும் உங்களை வந்து சேரும்‌. அதுமட்டுமில்லாமல் இந்த கார்த்திகை மாத கடைசி நாளில், மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்கு தடை வரக்கூடாது, மார்கழி மாதம் முழுவதும் நான் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும் என்ற வேண்டுதலை வைத்தால், மார்கழி மாதம் தடையில்லாமல் இறைவனை வழிபாடு செய்யக்கூடிய அந்த நல்ல வாய்ப்பையும் இறைவன் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவான். அப்படி நாளைய தினம் நம்முடைய வீட்டில் எப்படித்தான் வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

கார்த்திகை மாதம் கடைசி நாள் வழிபாடு

கார்த்திகை மாதம் கடைசி நாள் செய்ய வேண்டிய வழிபாடு. இன்றைக்கே வீட்டை முதலில் சுத்தம் செய்து விடுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்து விடுங்கள். பூஜை அறையில் சுவாமி படங்களை பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். கார்த்திகை மாதம் கடைசி நாள் சனிக்கிழமை அன்று அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, குலதெய்வத்தை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றுங்கள்.

- Advertisement -

நிலை வாசலில் 2 தீபம் ஏற்றி விடுங்கள். பூஜை அறைக்கு வந்து உங்கள் குலதெய்வத்தை நினைத்து, அந்த முருகப்பெருமான், ஈசன், ஐயப்பன் அம்பாள், எல்லாரையும் நினைத்து மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த கார்த்திகை மாதத்தில் வேலை சுமை காரணமாக, சூழ்நிலை காரணமாக, என்னால் மாதம் முழுவதும் வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் இந்த கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் நான் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு, என்னுடைய குடும்பத்தை நல்வழி படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கூடவே அடுத்த நாள் பிறக்க போகும் மார்கழி முதல் நாளிலிருந்து இறைவனை வழிபாடு செய்யக்கூடிய பாக்கியத்தை எனக்கு கொடு என்று கேளுங்களேன்.

- Advertisement -

உங்களுக்கான ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் நீங்கள் தினம் தினம் விளக்கேற்றி வழிபாடு செய்த பலனை, இந்த கார்த்திகை கடைசி நாள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததில் பெற்று விடுவீர்கள். மனநிறைவோடு இந்த வழிபாட்டை செய்து முடியுங்கள். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் வழிபாடு செய்யக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

உங்களால் முடிந்தால் ஏதாவது ஒரு இனிப்பு பிரசாதத்தை செய்து நிவேதனமாக இறைவனுக்கு வையுங்கள். இந்த கார்த்திகை மாதம் கடைசி நாள் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. திருவோண நட்சத்திரம் சேர்ந்து வந்து இருக்கிறது. விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியும் சேர்ந்து வந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பைரவர் வழிபாடு

ஆகவே முடிந்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவில், பெருமாள் கோவிலோ, சிவன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த இறைவனின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -