கார்த்திகை மாதம் முடிவதற்குள் வீட்டில் இந்த செடியை வைத்தால், மகாலட்சுமி தேவி நம் வீட்டிற்குள் வந்து விடுவாள். காலத்தால் தீர்க்க முடியாத கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு காலம் தான் நல்லதொரு தீர்வை சொல்லும். அதாவது பெரிய பெரிய கஷ்டங்கள் கூட, சில நாட்கள் கடந்து செல்லும்போது, நமக்கு மறந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆனால் காலத்தினால் கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய பெரிய கஷ்டங்கள் சில பேருக்கு இருக்கும். அந்த கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். வீட்டிற்குள் மகாலட்சுமியை வர வைக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கார்த்திகை மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம். தீப வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதம் முடிவதற்குள் உங்களுடைய வீட்டில் இந்த ஒரு செடியை வாங்கி வைத்து விடுங்கள். அது எந்த செடி தெரியுமா. துளசி செடி. துளசி தாய் கார்த்திகை மாத பௌர்ணமி நாள் அன்று பிறந்ததாக சாத்திரம் சொல்லுகிறது. இந்த கார்த்திகை மாதத்தில் துளசி செடியை வீட்டில் வாங்கி வந்து வைத்து, துளசி செடியை வழிபாடு செய்ய தொடங்கினால், வீட்டில் சுபிட்சம் பிறக்கும். இந்த துளசி செடி கார்த்திகை மாதத்தில் நம் வீட்டிற்குள் வந்தால், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் வந்ததாக அர்த்தம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் ஏற்கனவே துளசி செடி இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே அதற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறீர்கள் என்றால், ஒரு சின்ன துளசி செடியை வாங்கி உங்கள் தெரிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கோ சொந்த பந்தங்களுக்கோ அல்லது ஏதாவது ஒரு கோவிலுக்கோ தானமாக கொடுக்கலாம். இப்படி கார்த்திகை மாதத்தில் துளசி செடியை தானம் கொடுப்பது சுபிட்சத்தை கொடுக்கும்.

ரொம்ப நாளா எனக்கு இந்த கஷ்டம் இருக்குது. இந்த கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமே பிறக்கவில்லை என்று எல்லா மனிதர்களுக்கும் ஒரு பிரச்சனை நிச்சயமாக இருக்கும். தினமும் துளசி செடிக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, சிறிது பால் தண்ணீர் ஊற்றி விளக்கு ஏற்றி அந்த துளசி செடியை வளம் வந்து உங்கள் மனதிற்குள் இருக்கும் தீராத அந்த கஷ்டத்தை துளசி தாயிடம் சொன்னால், அந்த தீர்க்க முடியாத கஷ்டம் கூட ஒரு சில நாட்களில் சீக்கிரம் தீர்ந்துவிடும். நிறைவேறாத ஆசைகளைக் கூட நிறைவேற இந்த துளசி செடி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக வீட்டில் இருக்கும் பெண் பிள்ளையின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக வயதுக்கு வந்த பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும். திருமணமான பெண்ணுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து சந்தோஷமாக வாழ வேண்டும். அந்தப் பெண் குழந்தைக்கு மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்க வேண்டும் என்றால் செவ்வாய் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தைகள் காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு துளசி செடிக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, துளசி செடியை 3 முறை வளம் வந்து துளசி தாயை வணங்க வேண்டும்.

அதேபோல கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்வது மிக மிக சிறப்பு. இன்னும் ஒரு சில நாட்களில் கார்த்திகை தீபம் வரவிருக்கின்றது. உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்கு மண் அலக் விளக்கு தானமாக வாங்கி கொடுக்கலாம். மிகவும் வசதியுள்ளவர்கள் பித்தளையில் உங்களால் முடிந்த விலக்குகளை சிறிய சிறிய கோவில்களுக்கு, அல்லது பெரிய பெரிய கோவில்களுக்கு தானமாக வாங்கிக் கொடுப்பது சிறப்பான பலனை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -