கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் வீட்டில் இப்படி விளக்கு ஏற்றினால் காலத்திற்கும் அழியா செல்வம் பெறுவதற்கான வரம் கிடைக்கும்.

vilakku
- Advertisement -

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது என்றதும் நம்முடைய நினைவிற்கு வருவது கார்த்திகை தீபம் தான். விளக்கு ஏற்றுவது என்பது இந்த மாதத்திற்கே உண்டான சிறப்பாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில், கார்த்திகை மாத சோமவார விரதம் மிக மிக விசேஷம். சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும். அண்ணாமலையார் தீபம், சபரிமலைக்கு மாலை போடுபவர்கள், முருகனுக்கு வேண்டி மாலை போடுபவர்கள், என்று இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாகவே நமக்கு சொல்லப்பட்டுள்ளது. மார்கழி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம் மட்டும் இறையருள் பெறுவதற்கான மாதம் கிடையாது இந்த வரிசையில் கார்த்திகை மாதமும் சேரும்.

கார்த்திகை மாதம் முதல் நாள் வீட்டில் எப்படி வழிபாடு செய்வது. கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டில் எப்படி விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளைய தினம் அதாவது 17-11-2022 ம் தேதி புதன்கிழமை கார்த்திகை முதல் நாள் பிறக்கவிருக்கின்றது. நாளை அதிகாலை வேலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் பெண் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் கூட்டி கோலம் போட்டு, நிலை வாசலுக்கு வெளியில் முதலில் 2 மண் அகல் விளக்குகளை வைத்து ஏற்றி வைக்க வேண்டும். மண் அகல் விளக்குகளை தரையில் வைக்காதீங்க. ஒரு சின்ன தட்டின் மேல் அந்த மண் அகல் விளக்கை ஏற்றி வைத்து, கார்த்திகை முதல் நாளை இந்த தீப ஒளியில் வரவேற்க வேண்டும்.

- Advertisement -

காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசல் தெளித்து கோலமிட்டு இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளை கார்த்திகை முதல் நாள் அல்லவா. உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று உப்பு, மஞ்சள், குங்குமம், போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது நல்ல பலனை கொடுக்கும்.

கார்த்திகை ஒன்றாம் தேதி மட்டும் இந்த வழிபாடு கிடையாது. கார்த்திகை மாதம் முழுவதும் மேல் சொன்ன விளக்கு ஏற்றக்கூடிய வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து இறைவனிடம் வைக்கக் கூடிய வேண்டுதல், வீட்டில் செல்வ செழிப்பை கொடுக்கும். அதோடு மட்டும் அல்லாமல் வறுமை நீங்கி உங்களுடைய பரம்பரையே செல்வ செழிப்பாக வாழ வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் வைத்தால் அந்த வரம் உடனே கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது வேண்டுதல் இருக்கும். இறைவனிடம் நீண்ட நாட்களாக வேண்டிக் கொண்டே இருப்பார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கான வரம் இன்னும் கிடைக்காமல் தாமதிக்கும். என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். என் பிள்ளைக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும். என்னுடைய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். அல்லது என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் கணவரின் முன்னேற்றத்திற்காக என்று நிறைய வேண்டுதல்கள் இருக்கலாம்.

அதில் ஏதாவது ஒரு வேண்டுதலை குறிப்பாக எடுத்துக்கொண்டு, தினமும் பூஜை அறையில் அந்த வேண்டுதலுக்காக விளக்கேற்றி இறைவனிடம் வரம் கேட்டாலும், நீங்கள் வேண்டிய வேண்டுதல் இந்த கார்த்திகை மாதம் முடிவதற்குள் பலிபதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. கார்த்திகை மாதம் என்றால் கார்த்திகை தீபம் வரக்கூடிய அந்த மூன்று நாட்கள் மட்டும்தான் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்தது. அப்படி கிடையாது. கார்த்திகை மாதம் முழுவதும் இந்த தீப ஒளியில் இறைவனை நீங்கள் வழிபாடு செய்வது உங்களுக்கு கோடான கோடி நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -