கார்த்திகை மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Karthigai madha rasi palan
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான ராசிகளுக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் ஜோதிட ரீதியாக கிடைக்கப் பெறுவது வழக்கம். அந்த வகையில் முருகனுடைய அருளைப் பெற இந்த கார்த்திகை மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? இம்மாதம் அவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கக்கூடிய இனிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை உங்கள் சாமர்த்தியத்தால் திறம்பட சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை அவ்வபோது தீர்த்துக் கொள்வது நல்லது. மனதில் வைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டே செல்லாமல் இருக்கவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு சிறப்பாக அமையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் அவ்வப்போது சிறுசிறு குறைகளாக வந்து நீங்கும். முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் யோகமான மாதமாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடிய அமைப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் தயங்காமல் முடிவெடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு வெளியூர் வெளிநாடு களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்று தரும். எதிர்பாராத சமயத்தில் சிலர் உங்களை திக்குமுக்காட செய்வார்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கக் கூடிய புதிய வாய்ப்புகளை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது முன்னேற்றம் தரும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறையாக இருப்பது நல்லது. பார்வதி தேவியை வழிபடுவதால் நன்மைகள் நடக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் தடைபட்ட காரியங்கள் தடை இல்லாமல் முடிவுக்கு வரக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக சில சமயங்களில் நடக்கும் என்பதால் கூடுமானவரை சரியான திட்டமிடல் மூலம் உங்கள் முன்னேற்றத்தை அடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளுக்கு மனைவிவழி அனுகூல பலன் உண்டாகும். நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல லாபம் காண்பீர்கள். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள் செல்வ செழிப்பு உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்க கூடிய இனிய மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றியுள்ள பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் உங்கள் எதிரிகளை எளிதாக வெற்றி கொள்ளலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் பெரிதாக மாறக் கூடும் என்பதால் அவ்வப்போது அதனை பேசி முடித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் படிப்படியாக நீங்கும். வேங்கடவனை வழிபடுங்கள் நன்மை நடக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். திருமண தடைகள் நீங்கி வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு வராத பழைய கடன்கள் கூட வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் இதுவரை வந்து கொண்டு இருந்த தடைகள் விலகி மற்றவர்களுடைய ஆதரவையும் பெறுவீர்கள். வாகன ரீதியான செலவுகள் அவ்வப்போது ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கொடுப்பார்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் நீங்கள் எடுத்துக் கூறிய ஒவ்வொரு விஷயமும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் தடைகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத் தகராறுகள் அனைத்தும் நன்மையில் முடியும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் பெருகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாடு நன்மைகளை கொடுக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் சுப பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடு வதை தவிர்த்து அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் இருப்பது நல்லது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுய லாபம் காணும் வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்வுக்கு வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பொருளாதாரம் ஏற்றம் காணும். ஆரோக்கியம் படிப்படியாக சீராகி வரும். செவ்வாய்கிழமையில் முருக வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தகுந்த சமயத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதியை பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கனிவான பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை எளிதாக கவர முயற்சி செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட தேவையற்ற பழிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம். வேலனை வழிபட்டால் அற்புதம் நடக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் உங்கள் உற்சாகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படாது. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் பங்களிப்பு அதிகம் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் உண்டாகும். வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. தேவையற்ற வீண் கோபம் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது உத்தமம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும். வியாழன் கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் மற்றவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புக்கு மீறிய நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை இன்னும் மெருகேற்றி காண்பிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பீர்கள். குடும்ப பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுபவசாலிகளின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. திங்கட் கிழமையில் சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் அனுகூலமான பலன்கள் ஏற்பட கூடிய நல்ல மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரலாம். புதிய வரவு ஒன்று இல்லம் தேடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் படிப்படியாகக் குறையும். வெளியிட பயணங்கள் மூலம் லாப வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது. விக்னங்கள் தீர்த்தம் விநாயகரை வழிபடுதல் நலம் தரும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கார்த்திகை மாதம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறது. இதுவரை நீங்கள் சந்தித்து வந்தார் குழப்பநிலை தீர்ந்து தெளிவான முடிவு எடுக்கக் கூடிய தன்னம்பிக்கை வளரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதை உணரக் கூடிய அற்புதம் நிகழும். சுயதொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புதிய பணியாளர்களை பணி அமர்த்த முற்படுவீர்கள். உத்யோகத்தில் இருந்து வந்த உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும். செவ்வாய்க்கிழமையில் கந்தனை வழிபடுதல் நல்லது.

- Advertisement -