கார்த்திகை மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Karthigai madha rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் தொழில் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புதுசாக முதலீடு செய்வது வங்கி கடன் வாங்குவது, பண பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். சண்டை வந்தால் வாக்குவாதம் செய்யக்கூடாது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும்.

இந்த மாதம் முழுவதும் நீங்கள் முன்கோபத்தை குறைக்கணும். நிதானத்தை கடைப்பிடித்தால் நிம்மதி பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பொறுப்புகளை வேலைகளை நீங்களே செஞ்சு முடிக்கனும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். இந்த மாதம் முழுவதும் மாரியம்மன் வழிபாடு உங்களுக்கு சிறப்பான நற்பலனை கொடுக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய மாதமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் கணக்குகளை நீங்களும், உங்க பாட்னரும் சேர்ந்து பார்க்கணும். ஒருவரை முழுசாக நம்பி ஒரு விஷயத்தை ஒப்படைக்காதீங்க. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் கவனம் இருந்தால் பிரச்சனை இருக்காது.

வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் மூலம் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அடிக்கடி லீவு போடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் அதிக கவனம் தேவை. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். இந்த மாதம் முழுவதும் முருகர் வழிபாடு உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன நிம்மதியான மாதமாக இருக்கும். இதுநாள் வரை இருந்த பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக வெளிவர தொடங்கி விடுவீர்கள். சொல்பேச்சு கேட்காத பிள்ளைகள், படிக்காத பிள்ளைகள் எல்லாம் பெற்றவர்களின் பேச்சைக் கேட்டு நடக்க தொடங்கி விடுவார்கள்.

வீட்டு முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மனைவியிடம் சொல்லாமல் எந்த வேலையும் செய்யாதீங்க. மனைவியிடம் பொய் சொன்னால் பிறகு எதிர்காலத்தில் பிரச்சனை உங்களுக்கு தான். ஜாக்கிரதை, இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை நடக்கக்கூடிய மாதமாக தான் இருக்கும். வேலையில் இருந்த சின்ன சின்ன சிக்கல்கள் எல்லாம் சரியாகும். தொழிலை விரிவு படுத்தலாம். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். அவசர அவசரமாக சமையல் அறைக்குள் போகக்கூடாது. கூர்மையான ஆயுதங்களை சரியாக பயன்படுத்துங்கள். இந்த மாதம் முழுவதும் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மை நடக்கக்கூடிய மாதமாக தான் இருக்கும். இத்தனை நாள் செய்ய முடியாத நிறைய நல்ல விஷயங்களை இந்த மாதத்தில் செய்து முடிக்கலாம். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல போகின்றது.

புதுசாக தொழில் தொடங்கி நிறைய லாபம் சம்பாதிப்பீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய மாதம் இது. கடின உழைப்பை முதலீட்டாக போட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். தினமும் காலை 6 மணிக்கு வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் வழிபாட்டை செய்தால் உங்களுக்கு நன்மை நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். பெருசாக பிரச்சினைகள் இல்லை பயப்படாதீங்க. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்கணும். யாரையும் உதாசீனப்படுத்தி பேசக்கூடாது. நண்பர் தானே இவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம் என்று குடும்ப விஷயத்தை எல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

உங்கள் வேலையை நீங்க பாருங்க. அடுத்தவர்கள் வேலையில் அனாவசியமா மூக்கை நுழைக்காதீங்க. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கணும். அன்றைக்கான வேலையை அன்றைக்கே முடிக்கணும். காலையில் எழுந்து சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி ஐந்து நிமிடம் அமர்ந்தால் உங்களுக்கு நன்மை நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். சில பேர் கல்யாணத்துக்கு, காதுகுத்துக்கு, வளைகாப்பு என்று சுப செலவுக்கு கடன் வாங்குவீங்க.

கவலைப்படாதீங்க எல்லாம் நல்லபடியாக நடக்கும் காதல் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்த பதவியை பெறுவீர்கள். நினைத்த சம்பளமும் கைக்கு வந்து சேரும். கூடவே சேர்த்து சேமிப்பையும் உயரும். தினமும் அங்காளம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி பெறக்கூடிய மாதமாக இருக்கும். நீண்ட நாள் போராடி வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் பஞ்சாயத்துகளில் எல்லாம் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வரும். மாணவர்களுக்கு கடின உழைப்பு வெற்றியை கொடுக்கும்.

வேலை வாய்ப்புக்காக தேர்வு எழுதிக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். இந்த மாதம் நீங்கள் நினைத்த ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உள்ளது. பயணங்கள் பல விதமான நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும். தினமும் துர்க்கை அம்மனை நினைத்து வேண்டுதல் வைத்தால் வெற்றி நிச்சயம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு சில நாட்கள் அலைச்சலை கொடுக்கும். ஒரு சில நாட்கள் நிம்மதியை தரும். சில பேருக்கு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட அலைச்சலுக்கு பின்பு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். ரொம்பவும் கஷ்டப்பட்டால் தான் இந்த மாதம் உங்களுக்கு பலன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை பாருங்கள். குறிப்பாக கண் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும். அதிக நேரம் கணினி கைபேசி பார்ப்பதை தவிர்க்கவும். தினமும் நரசிம்மரை நினைத்து வேண்டுதல் வைத்தால் நன்மை நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட காற்று வீசப் போகின்றது. எதிர்பாராத பணம் பையை நிரப்பும். வாரா கடன் வசூல் ஆகும். நிறைய தான தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனது ஆன்மீகத்தை தேடி அலைபாயும். எதிர்பாராமல் நடக்கும் நிறைய ஆச்சரியங்கள் உங்களை நல்வழிப்படுத்தும்.

ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சாதாரண வாழ்க்கையை வாழ விருப்பப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். வாகனங்களில் செல்லும்போது ஹெட்போன் போடாதீங்க. குறிப்பா பைக் ஓட்டும் போது. தினமும் ஓம் நமசிவாய மந்திரம் சொல்வது உங்களுக்கு இன்னும் வாழ்க்கையில் பல நன்மையை கொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது, வியாபாரத்தை சென்று கவனிக்காமல் இருப்பது, போன்ற அலட்சியங்களை குறைத்துக் கொள்ளவும்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். விவசாயிகளுக்கு இந்த மாதம் எடுக்கக் கூடிய புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும். குறுக்கு வழியை நாடக்கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனது முழுவதும் இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். பெண்கள் குழந்தைகளுக்கு இந்த மாதம் நிறைய நன்மை நடக்கும். கடல் கடந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

நிதி நிலைமை தான் கொஞ்சம் மோசமாக இருக்கும். நவம்பர் மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு ஏற்படும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். சிக்கல்களை எல்லாம் எளிதாக அவிழ்க்கக்கூடிய மாதம் இது. தினமும் ஐயப்பன் வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -