இந்த ஹேர் பேக் போட்டா ஒரு முடி கூட நரைக்காது. ஒரு முடி கூட கொட்டாது.

hair
- Advertisement -

40 வயதை தொடும் வரையாவது தலைமுடி வெள்ளையாக மாறக்கூடாது என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் சில பேருக்கு சின்ன வயசிலேயே நரைமுடி வந்துவிடுகிறது. நிறைய பேருக்கு தலை முடி உதிர்வு வேற அதிகமாக இருக்கிறது. முடி அடர்த்தியாக இல்லை என்றால் நம்முடைய தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.

தலைமுடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள், இளநரை உள்ளவர்கள் வீட்டிலிருந்தபடியே, சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய அழகு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

காடு மாதிரி கருகரு முடி வளர ஹேர் பேக்

இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று முதலில் பார்த்து விடுவோம். கருஞ்சீரகம், வெந்தயம், கருவேப்பிலை பொடி. காய்ந்த கருவேபிலையை நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து சலித்து நைசான பொடியாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இப்போது கருவேப்பிலை பொடி கடைகளில் தனியாக ஹேர் பேக்குக்காக விற்கின்றது.

நல்ல பிராண்டில் கலப்படம் இல்லாத கலர் சேர்க்காத கருவேப்பிலை பொடி இருந்தாலும் வாங்கிக் கொள்ளலாம். அது உங்களுடைய சௌகரியும். முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் போல இந்த தண்ணீர் கொதித்தால் அந்த இரண்டு பொருட்களில் இருக்கும் சத்தும் தண்ணீரில் இறங்கி, தண்ணீர் லேசாக பிசுபிசுப்பு தன்மையோடு வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டி இந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் தேவையான அளவு கருவேப்பிலை தூள் போட்டு கலந்தால் சூப்பரான ஹேர் பேக் தயார்.

ரொம்ப ரொம்ப ஈஸியான மெத்தட் தான் இது. இந்த ஹேர் பேக்கை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் நன்றாக எண்ணெய் தடவி விட்டு, சிக்கு எடுத்து விடுங்கள். பிறகு வேர் கால்களில் படும்படி இந்த ஹேர் பேக் போடுங்கள். பிறகு நுனி மூடி வரை இந்த ஹேர் பேக்கை போட்டு விடவும்.

அப்போதுதான் உங்களுக்கு நரைமுடி இருந்தாலும் அது சீக்கிரம் கருப்பாக மாறும். நரை முடி வராமலும் பாதுகாக்கப்படும். முடியில் வெடிப்பு இருந்தால் அதை சரி செய்யவும் இந்த ஹேர் பேக் உதவி செய்யும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த ஹேர் பேக்கை போடுங்க.

மூன்று மாதம் தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது, தலைமுடி உதிர்வில் நல்ல மாற்றம் தெரியும். புதுசாக வெள்ளை முடிகள் வராமல் தடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய உணவில் ஆரோக்கியமான பொருட்களையும் கொஞ்சம் சேர்த்துக்கணும். அதிலும் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -