கருக்காத்தம்மன் ஸ்லோகம்

karukathamman-compressed

நமது பூர்வ ஜென்ம கர்மவினைகளை பொறுத்து நமக்கு உண்டாகும் பேறுகளில் குழந்தை செல்வமும் ஒன்று. ஒரு குடும்பம் என்றிருந்தால் அதில் அடுத்த தலைமுறை உருவாக வாரிசு எனும் குழந்தை பேறு அக்குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாவதில் தாமதம், பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பது போன்றவை உண்டாகிறது. மேற்கூறிய அனைத்து குறைகளையும் தீர்க்கும் தெய்வம் தான் “ஸ்ரீ கருக்காத்தம்மன். அந்த தெய்வத்தை துதிப்பதற்கான ஸ்லோகம் இதோ.

garbarakshambigai

கருக்காத்தம்மன் ஸ்லோகம்

ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹா பாக்கியம் ஆரோக்கியம்
புத்திர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுப்ஹி
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய திச்வரி
நந்தகோப சீதம் தேவம்
பதிம் மேகுருதே நமஹா

பெண்களின் கருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” அம்மனின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவர்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் துதித்து வந்தால் கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை நீக்கும். குழந்தை பெற்றெடுக்கும் காலத்தை நெருங்கி வரும் பெண்கள் இம்மந்திரத்தை தினமும் துதித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

Baby

எந்த ஒரு உயிரும் தாயில்லாமல் பிறப்பதில்லை. இறைமையும், தாய்மையும் ஒன்று தான் என்பது நமது சாத்திரங்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் உறுதியான கருத்தாகும். எல்லா உயிர்களுக்கும் தாய் இருந்தாலும் அகிலம் அனைத்திற்கும் தாயாக இருப்பவர் அன்னை பராசக்தி. பிரபஞ்சம் முழுவதும் தனது சக்தியை நிரம்பச் செய்திருக்கும் அன்னையை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் அருள்வார். பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையை காக்கும் ஸ்ரீகருக்காத்தம்மனின் மந்திரத்தை துதித்து வந்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Karukathamman slokam in Tamil. It is also called as Karukathamman mantra in Tamil or Karukathamman manthiram in Tamil or Karukathamman slogam lyrics in Tamil.