பாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்

sai-baba-compressed

தவறு செய்யாத மனிதனே இந்த உலகில் இல்லை. தனது அறியாமையினால் செய்யும் தவறுகள் சக மனிதனாலும், இறைவனாலும் மன்னிக்கப்படக்கூடியவை. ஆனால் செய்யும் தவறுகளுக்கு ஏற்ற கர்ம வினைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை பலரும் அந்நேரத்தில் மறந்து விடுகின்றனர். தனது பக்தர்களின் எப்பேர்ப்பட்ட துன்பங்களையும் நீக்கும் மகானாக இருப்பவர் மகான் “ஸ்ரீ சாய் பாபா”. அவரை போற்றும் மந்திரம் இதோ.

Sai baba tamil song

சாய் பாபா மந்திரம்

ஓம் ஸர்வ சாக்ஷியை நமஹ

எளிமையின் வடிவாக வாழ்ந்த ஷீர்டி சாய் பாபாவை போற்றும் மந்திர வரி இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளும் மனதில் சாய் பாபாவின் திருமுகத்தை நினைத்தவாறு 108 முறை கூறுவது மிகவும் சிறந்ததாகும். மேலும் வியாழக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்த கற்கண்டுகள், முந்திரி, பாதாம் பருப்புகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து மேற்கூறிய மந்திர வரியை 108 முறை துதித்து வந்தால் உங்களின் பற்றியிருக்கும் பாவ வினைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். உங்களின் நியாயமான கோரிக்கைகள் விருப்பங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவார் சாய் பாபா.

Sai baba

கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் ஷிர்டியிலேயே வசித்து வந்தவர் சாய் பாபா. அந்த ஊரில் பாபா தங்கியதன் மூலம் ஷீர்டி மண் புனித பூமியாக லட்சக்கணக்கான சாய் பாபாவின் பக்தர்களுக்கு மாறி போனது. பக்தர்களின் குறைகள் அனைத்தையும் பாபா தீர்த்த போது, மக்கள் அனைவரும் அவரை இறைவன் என்று புகழ்ந்த போதும், இறைவன் மிகவும் உயரியவன் நான் அவனது சேவகன் மட்டுமே என்று கூறிய அவரது தன்னடக்கத்திற்கு ஈடு இணையில்லை. அவரை வழிபடுபவர்களுக்கு நன்மைகள் அனைத்தும் ஏற்படும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ சுப்பிரமணியர் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sai baba stuti in Tamil. It is also called as Sai baba manthiram in Tamil or Shridi Sai baba mantra lyrics in Tamil.