வெறும் 3 நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டால் போதும். கழுத்து, கைமுட்டி, கால் முட்டி, அக்குள் பகுதியில் இருக்கும் அடர் கருப்பு நிறம் கூட கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போகும்.

neck
- Advertisement -

நிறைய பேருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், கழுத்தை சுற்றிப் பார்த்தால் கருப்பு நிறம் அப்படியே அடர்த்தியாக படிந்திருக்கும். சில பேருக்கு கை முட்டி, கால் முட்டி, அக்குள் பகுதி, தொடைகளின் இடுக்கு பகுதியில் எல்லாம் அப்படியே கருப்பாக இருக்கும். என்னதான் செய்தாலும் அந்த கருப்பு நிறம் அவ்வளவு எளிதில் போகாது. அதை சரி செய்ய வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம். எளிமையான முறையில் அழகு குறிப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவை என்பவர்கள் குறிப்பை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

அழகு குறிப்பு:
ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதில் பழுத்த வாழைப்பழம் 1 போடவும். ஒரு ஸ்பூனிலோ ஒரு ஸ்மாஷரிலோ அந்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து விடுங்கள். இதோடு தயிர் 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு 1 டேபிள் ஸ்பூன், காபித்தூள் 2 ஸ்பூன், போட்டு நன்றாக கலந்தால் சூப்பரான பேக் தயாராகி இருக்கும். இந்த பேக்கை நீங்கள் உடம்பு முழுவதும் தேய்த்து ஸ்க்ரப் செய்யுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் ஒவ்வொரு இடத்தையும் ஸ்கிரிப் செய்து அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடம் கழித்து குளித்தால் உடம்பில் இருக்கும் டெட் செல்கள் நீங்கி உடல் முழுவதும் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த பேக்கை தாராளமாக முகத்திலும் போடலாம். எந்த பக்க விளைவுகளும் வராது. ஒரு சில பேருக்கு எலுமிச்சம் பழம் சேர்த்தால் செட் ஆகாது என்பவர்கள் அந்த ஒரு பொருளை மட்டும் தவிர்த்து மற்ற பொருட்களை சேர்த்து முகத்தில் ஸ்கிராப் செய்யவும்.)

- Advertisement -

அப்படி இல்லை உங்களுக்கு உடல் முழுவதும் இந்த பேக் தேவையில்லை என்றால், அடர் கருப்பு நிறம் உள்ள பகுதியில் மட்டும் இந்த பேக்கை அப்ளை செய்யவும். 1/2 மணி நேரம் பேக் அப்படியே இருக்கட்டும். பிறகு இந்த பேக் டிரை ஆகிவிடும். கொஞ்சம் தண்ணீரை எடுத்து பேக் மேலே தெளித்து ஈரம் செய்து விட்டு, உங்கள் கையை கொண்டு மீண்டும் நன்றாக ஸ்கிராப் செய்து, மசாஜ் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை பின்பற்றினால் ரொம்பவும் கருப்பாக இருக்கக் கூடிய இடம் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிறமாக மாறிவிடும்.

மேலே சொன்ன குறிப்பை பின்பற்றியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. கருப்பு நிறம் போகவில்லை என்றால், நீங்கள் இந்த மேலே சொன்ன பேக்கில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம். பேக்கிங் சோடா சேர்த்து இந்த குறிப்பை பின்பற்றும் போது அந்த கருமை நிறம் எளிமையாக நீங்கும். ஆனால் சில பேருக்கு பேக்கிங் சோடா செட்டாகாது. பேட்ச் டெஸ்ட் எடுத்துக்கொண்டு பயன்படுத்தவும். பேக்கிங் சோடாவை பேக்கில் சேர்க்கும் போது அதை நீங்கள் முகத்திற்கு அப்ளை செய்யாமல் இருப்பது நன்மை தரும்.

- Advertisement -

அப்படியும் இல்லை என்றால், உருளைக்கிழங்கின் சாறு 2 ஸ்பூன் சேர்த்தும் இந்த பேக்கை நீங்கள் தயார் செய்யலாம். அதாவது மேலே சொன்ன பேக்கில் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்க சொல்லி இருக்கின்றோம் அல்லவா, அதற்கு பதில் பேக்கிங் சோடா, அல்லது பொட்டேட்டோ ஜூஸ் சேர்த்தாலும் உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும்.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில் 7 நாட்களில் மீண்டும் முடி வளர வேண்டும் என்றால் ஆளி விதையை தலையில் இப்படித்தான் போடணும்.

தொடர்ந்து மூன்று நாட்கள் பேக்கை பயன்படுத்திய பிறகு, பேக் போடுவதை நிறுத்தி விடுங்கள். பிறகு வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ தான் இந்த பேக்கை போட வேண்டும். தினமும் போட்டு வந்தாலும் சருமத்தில் ஏதாவது பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவை என்பவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -