பூஜை அறையில் இந்த 1 பொருள் இருந்தாலே போதும். தெய்வ சக்தி உங்கள் வீட்டில் எந்த ஒரு மனக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியோடு தங்கிக் கொள்ளும்.

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருடைய மனக்குறை இதுதான். ‘எங்களுடைய வீட்டில் தெய்வ சக்தி நிறைந்து இருக்கவில்லை! தெய்வம் எங்களுடைய வீட்டில் குடி கொண்டுள்ளதா இல்லையா? என்று சந்தேகமாக உள்ளது. நான் செய்யும் பூஜை புனஸ்காரங்களின் பலன் எனக்கு கிடைக்கவில்லை. தெய்வம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தோடு பூஜை செய்து வருகின்றோம்.’ கஷ்டம் இருக்கும் எல்லோரது மனதிலும் இருக்கும் கேள்விகள் இது! இதுவே முதலில் தவறு. சந்தேகத்துடன் நாம் செய்யும் பூஜை நிறைவு பெறாது. சந்தேகத்தோடு செய்யும் பூஜை மட்டுமல்ல, நாம் துவங்கும் எந்த ஒரு காரியத்தையும் நம்பிக்கையோடுதான் துவங்க வேண்டும்.

poojai

நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆக நீங்கள் நம்பிக்கையோடு உங்கள் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து, இறை வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக பூஜையில் கைமேல் பலனை பெறமுடியும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. இது தவிர, நம்முடைய வீட்டில் இறை சக்தியை நிரந்தரமாக தங்க வைக்க வேறு ஏதும் ஆன்மீக ரீதியான வழி உள்ளதா என்று கேட்பவர்களுக்கு இந்த குறிப்பின் மூலம் நிச்சயமாக பதில் கிடைக்கும்.

நம்முடைய வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த, நம் வீட்டில் இருக்கக்கூடிய தேவையற்ற குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்க பணக்கஷ்டம் மனக்கஷ்டம் தீராத துயரம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க, ஒரு வழி உள்ளது. நம் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வாங்கி வைக்க வேண்டும். அது எந்த பொருள்.

karungali-kattai

தெய்வ சக்தியை ஈர்க்க கூடிய, நேர்மறை ஆற்றலை அதிகமாக ஈர்க்கக்கூடிய, நம்முடைய வேண்டுதல்களை ஈர்த்து கொள்ளக்கூடிய பொருள் தான் இந்த கருங்காலி கட்டை. இது பல பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த காலத்தில் கருங்காலி மரத்திலிருந்து செய்யப்பட்ட பல வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி வந்தார்கள். காரணம் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக.

- Advertisement -

இந்த கருங்காலி கட்டையில் ஒரு சிறிய துண்டை வாங்கி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வழிபாடு செய்து வரலாம். கருங்காலிக் கட்டைக்கு ஒரு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் விளக்கு ஏற்றும் போது இதற்கும் ஒரு தூபம் காண்பித்து வழிபட்டாலே போதும். உங்களுடைய வேண்டுதல்களுக்காண பலனை இரட்டிப்பாக்கி, நம்பிக்கையான இறைவழிபாட்டை செய்ய இந்த கருங்காலிக் கட்டை நிச்சயம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

karungali1

பூஜை அறையில் நீங்கள் மந்திரங்களை உச்சரிக்கும் போது, அந்த மந்திரங்கள் உடனே சித்தியாக, அந்தப் பிரார்த்தனை அதிவிரைவாக இறைவனை அடைய, இந்த கருங்காலி கட்டை உங்களுக்கு உதவியாக இருக்கும். மந்திரத்தை உச்சரிக்கும்போது கருங்காலி கட்டையால் செய்யப்பட்ட ஜெப மாலையை கையில் வைத்துக்கொண்டால், மந்திரங்களின் சக்தி அது விரைவாக செயல்படும்.

karungali

வீட்டில் இறைசக்தி குடி கொள்ளவில்லை. வீடு இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. குலதெய்வம் வீட்டில் குடி கொள்ளவில்லை என்று சொல்லுபவர்கள், இந்த கருங்காலிக் கட்டையை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாம். நல்லதே நடக்கும். பல நல்ல மாற்றங்களை வெகு சில நாட்களிலேயே உங்களுக்கு காட்டி தரும் சக்தி கொண்ட இந்த கருங்காலிக் கட்டையை வைத்து எல்லோரும் நல்ல பலனை அடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.