10 ரூபாய் செலவு செய்தால் போதும் பூச்செடிகள் பூக்களாக பூத்து தள்ளும்! வெயில் காலங்களில் ஏற்படும் நோய்த் தாக்குதல்களுக்கு இதைவிட சிறந்த உரம் இருக்க முடியாது.

karunjeeram-plants
- Advertisement -

நம் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளுக்கு தகுந்த பராமரிப்பு இல்லை என்றால் அது வெயில் காலங்களில் வாடத் துவங்கி விடும். நீர்சத்து மனிதனுக்கு மட்டுமல்ல, பூச்செடிகளுக்கு மற்ற எல்லா வகையான தாவரங்களுக்கும் இன்றியமையாதது. வெயில் காலங்களில் அதிக அளவு உறிஞ்சப்படும் இந்த நீர்சத்து செடிகளை விரைவாக வாடி போக செய்கிறது. அதிக செலவில்லாமல் பத்து ரூபாயில் எல்லா வகையான பூச்செடிகளிலும் வெயில் காலத்தில் கூட பூக்களாக பூத்து தள்ளுவதற்கு இந்த 1 பொருள் போதும்! அது என்ன பொருள்? அதில் இருக்கும் சத்துக்கள் என்ன? அதை எப்படி செடிகளுக்குக் கொடுக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

dry-rose-plant

ஒரு செடி நீர் சத்துக்கள் நிறைந்து, குளிர்ச்சியாக இருப்பதற்கு ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் தேவை. வைட்டமின்களும், மினரல்களும் செடிகளை வெயிலில் இருந்து பாதுகாத்து எப்போதும் ஈரப்பதத்துடனும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். அது மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கவும் செய்கிறது. வெயில் தாகத்தினால் செடிகள் வாடுவது மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறது.

- Advertisement -

நோயுற்ற பூச்செடிகள் பூக்களை கொடுப்பதில் குறை வைத்து விடுகிறது. கொத்துக் கொத்தாக கிளை முழுவதும் பூக்கள் பூத்து தள்ளுவதற்கு செடிகள் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அந்த ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய சத்து இந்த ஒரு பொருளுக்கு உண்டு, அது கருஞ்சீரகம் என்று கூறப்படுகிறது. கருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பூச்செடிகளுக்கு நல்ல ஒரு நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. இதனால் குளிர்ச்சி தன்மையுடன் எப்போதும் வெயிலில் இருந்து செடிகள் பாதுகாக்கப்படுகிறது.

Karunjeeragam benefits in Tamil

அது மட்டுமல்லாமல் நோய் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும், இந்த பொருள் நமக்கு செடிகளுக்கு உரமாக பயன்படும். வெயில் காலங்களில் அதிக அளவிலும், மற்ற காலங்களில் குறைந்த அளவிலும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தி எப்படி செடிகளுக்கு உரம் தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம். ஒரு செடிக்கு ஒரு தேக்கரண்டி வீதம், எத்தனை செடிகள் வைத்து இருக்கிறீர்களோ, அத்தனை பூச்செடிகளுக்கு அத்தனை தேக்கரண்டி கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு செடிக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் வீதம், எல்லா செடிகளுக்கும் தேவையான தண்ணீரை எடுத்து அதில் இந்த கருஞ்சீரக பவுடரைக் கரைத்துக் கொள்ளுங்கள். இரவு இதை செய்து வைத்து விட்டு, மறுநாள் காலையில் செடிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் கருஞ்சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த நீரில் இறங்கி இருக்கும். கருஞ்சீரகத்தில் இருக்கும் வைட்டமின்களும், மினரல்களும் எண்ணற்றவை எனவே அது செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கொடுத்து ஒவ்வொரு கிளையிலும் பூக்கள் ஆரோக்கியமான முறையில் பூப்பதற்கு உதவியாக இருக்கும்.

flower-plants

இதற்காக அதிக செலவு செய்து செயற்கை உரங்களை வாங்குவதை விட, நாம் இயற்கையாக இது போல செய்து நம் வீட்டு செடிகளை பராமரித்து வந்தால் மிகவும் நல்லது. நீங்கள் இந்த உரத்தை கொடுக்கும் பொழுது செடிகளின் வேர்களை சுற்றியுள்ள மண்ணை சிறிது கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதனை அப்படியே நேரடியாக ஊற்ற வேண்டும். வடிகட்ட வேண்டிய அவசியமில்லை. வெயில் காலங்களில் 20 நாட்களுக்கு ஒரு முறையும், மற்ற சாதாரண காலங்களில் 40 நாட்களுக்கு ஒரு முறையும் இதை கொடுத்து வந்தால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

- Advertisement -