நார்ச்சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி லட்டு செய்வது எப்படி

kavuni arisi laddu
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வெள்ளை அரிசியை உபயோகப்படுத்துவதைப் போல பண்டைய காலத்தில் பல வகையான அரிசிகளை உபயோகப்படுத்தினார்கள். அவ்வாறு அந்த அரிசிகளை உபயோகப்படுத்தி உண்ணும் பொழுது அவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த அரிசிகளில் ஒன்று தான் கருப்பு கவுனி அரிசி. கருப்பு கவுனி அரிசியை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கருப்பு கவுனி அரிசியை முறையாக உட்கொள்ளும் பொழுது மூளையை சிறப்பாக செயல்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகளை வெளியேற்றுகிறது. உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும், நரம்பிற்கும் சிறந்ததாக திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருப்பு கவுனி அரிசி – 1 கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • வெல்லம் பொடித்தது – 3/4 கப்
  • வறுத்த வேர்க்கடலை – 1 கப்
  • ஏலக்காய் – 5
  • முந்திரி – 10
  • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் கருப்பு கவுனி அரிசியை குறைந்தது 5 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் கூட ஊற வைக்கலாம். பிறகு அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். கழுவிய இந்த அரிசியை காட்டன் துணியை விரித்து அதில் போட்டு நன்றாக நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி காய்ந்த பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அரிசியை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

குறைந்தது ஐந்து நிமிடம் ஆவது வறுக்க வேண்டும். வறுத்த இந்த அரிசியை ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து விட வேண்டும். அடுத்ததாக மறுபடியும் அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி தேங்காய் துருவலை போட்டு அது நன்றாக சிவக்கும் வரை வருக்க வேண்டும். சிவந்த பிறகு அதையும் ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவை இரண்டும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் அரிசியை போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் துருவளையும் சேர்த்து அரைக்க வேண்டும். அடுத்ததாக ஏலக்காய், தோல் நீக்கப்பட்ட வருத்த வேர்க்கடலை இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக அரைந்த பிறகு இதில் வெல்லத்தைப் போட்டு ஒருமுறை மட்டும் பல்ஸ் மோடில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த மாவை ஒரு பவுலின் சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை உருண்டையாக பிடித்து வைத்து விட வேண்டும். மிகவும் ஆரோக்கியமான கவுனி அரிசி லட்டு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கால்சியம் புரோட்டின் சத்து நிறைந்த ராகி அல்வா ரெசிபி உங்களுக்காக

கவுனி அரிசியை வைத்து சமைத்து சாப்பிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் பலருக்கும் இல்லை என்பதால் இந்த முறையில் லட்டு செய்து தினமும் ஒரு லட்டு என்ற வீதம் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உண்ணும்பொழுது அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -