கால்சியம் புரோட்டின் சத்து நிறைந்த ராகி அல்வா ரெசிபி உங்களுக்காக

ragi halwa
- Advertisement -

இனிப்பு என்றால் பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது அதிலும் குழந்தைகளுக்கு ஸ்வீட் செய்தால் கொள்ளை பிரியம் ஆனால் மற்ற பலகாரங்களை கூட நாம் வீட்டில் செய்து விடுவோம் இந்த இனிப்பு வகை பலகாரங்களை அதிகமாக செய்வது கிடையாது அதிலும் அல்வா போன்ற இனிப்பு வகைகளை செய்வது கொஞ்சம் கடினம் தான்.

இந்த சமையல் குறிப்பு பகுதியில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தெம்பையும் தரக்கூடிய கேழ்வரகுகை வைத்து அல்வா எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இதை செய்வது மிகவும் சுலபம் ஆனால் சுவையோ பிரமாதமாக இருக்கும். இவை அனைத்திலும் விட உடம்பிற்கு எந்த விதத்திலும் கெடு தராது. இனிப்பை கண்டு யாரும் பயப்படவே தேவையில்லை.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கேழ்வரகு -2 கப்,
நாட்டு சர்க்கரை – 2 கப்,
தேங்காய் துருவல் -2 கப்,
ஏலக்காய் -1 டேபிள் ஸ்பூன்,
உப்பு -1 சிட்டிகை,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் கேழ்வரகை ஒரு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக அலசிய பிறகு 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கேழ்வரகுயை ரெண்டு கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதை ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை போட்டு அதில் அரைத்த ராகி மாவை ஊற்றி அதன் பாலை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள். பிறகு மீண்டும் கேழ்வரகில் தண்ணீர் ஊற்றி அரைத்து பாலை தனியாக எடுங்கள். இதே போல மூன்று முறை தண்ணீர் ஊற்றி ராகியில் உள்ள பால் முழுவதுமாக வரும் வரை அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் அடி கனமான பேன் வைத்து சூடானயுடன் வடிகட்டி எடுத்த பாலை அதில் ஊற்றி ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு நாட்டு சர்க்கரையும் சேர்த்து கை விடாமல் நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த பால் சுரண்டு அல்வா பதத்திற்கு வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிண்டுங்கள்.

- Advertisement -

கடைசியாக அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது ஒரு தட்டில் நெய் தடவி தயார் செய்து வைத்த அல்வாவை தட்டில் ஊற்றி பரப்பி சின்ன சின்னதாக துண்டுகள் போட்டு அரை மணி நேரம் அப்படியே விடுங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்தால் ஆரோக்கியமான கால்சியம் புரோட்டின் சத்துக்கள் நிறைந்த அல்வா தயார்.

இதையும் படிக்கலாமே: ஊட்டச்சத்து மிக்க தினையில் பாயாசம் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு ஏதோ ஒன்று செய்து கொடுக்காமல் இது போல ஆரோக்கியமாக செய்து கொடுங்கள் அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது செலவும் குறைவு. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

- Advertisement -