கொண்டைக்கடலை கிரேவியை ஒரு முறை இப்படி கறி குழம்பு சுவையில் செஞ்சு பாருங்க. கிச்சன்ல குழம்பு கொதிக்கும் போதே பசியை தூண்டி எல்லாரும் சாப்பிட வந்துடுவாங்க.

- Advertisement -

கொண்டைக்கடலை என்ன தான் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதை அதிக அளவு சமையலில் பயன்படுத்துவது கிடையாது. பெரும்பாலும் இதை வேக வைத்து சுண்டல் போல சாப்பிடுவார்களே அன்றி இதில் குழம்பு கிரேவி போன்றவற்றையெல்லாம் செய்வது மிகவும் குறைவு. இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல கொண்டைக்கடலையை வைத்து அசைவ சுவையில் ஒரு கிரேவியை செய்து கொடுத்தால் போதும். இனி எப்போதும் இதய செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையான இந்த கிரேவியை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த கிரேவி செய்ய முதலில் ஒரு கப் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்த பிறகு குக்கரில் சேர்த்து கொண்டைக்கடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் 1 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 2 மீடியம் சைஸ் தக்காளி நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 5 பூண்டு, 2 பச்சை, மிளகாய் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து இந்த கிரேவிக்கு ஒரு மசாலாவை அரைக்க வேண்டும் அதற்கு மிக்ஸி ஜாரில் 5 பல் பூண்டு, 1 சிறிய துண்டு இஞ்சி, 1 மீடியம் சைஸ் வெங்காயம், 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. இப்போது அரைத்ததை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக குக்கர் விசில் முழுவதும் இறங்கிய பிறகு வெங்காயம், தக்காளி பூண்டு அனைத்தையும் கரண்டி வைத்து குக்கரில் லேசாக மசித்து விடுங்கள். இதை கடையவோ அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைக்கவோ கூடாது. அதன் பிறகு இதிலிருந்து கொஞ்சமாக கொண்டைக்கடலையை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள்ஸஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 1 டீஸ்பூன் சீரகம், 1 பட்டை, 2 இலவங்கம், சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இதில் 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 11/2 டீஸ்பூன் தனியாத் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு, சேர்த்து மீண்டும் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும் போது அடுப்பை லோ பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அனைத்தின் பச்சை வாடையும் போன பிறகு நாம் வேக வைத்த கொண்டைக்கடலையை வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து அப்படியே இதில் ஊற்றி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்த பிறகு நாம் அரைத்து வைத்த கொண்டைக்கடலை விழுதை இதில் சேர்த்து கொதிக்க வைத்து ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை மேலே தூவி இறக்கி விடுங்கள். கறி சுவையில் சூப்பரான ஒரு கொண்டைக்கடலை கிரேவி தயார்.

இதையும் படிக்கலாமே: வெறும் வெங்காயம் மட்டும் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு அசத்தலான கெட்டி சட்னி நாவூறும் சுவையில் இப்படியும் நொடியில் செய்து சாப்பிடலாமே!

இந்த கிரேவி இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும். அது மட்டும் இன்றி புட்டு வெரைட்டி ரைஸ் போன்றவற்றின் உடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் ஒருமு றை இது போல செய்து பாருங்க.

- Advertisement -