வெறும் வெங்காயம் மட்டும் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு அசத்தலான கெட்டி சட்னி நாவூறும் சுவையில் இப்படியும் நொடியில் செய்து சாப்பிடலாமே!

vengaya-chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு வெறும் வெங்காயத்தை மட்டும் வைத்து சூப்பரான சுவையில் வெங்காய சட்னி எப்படி செய்வது? கெட்டியாக துவையல் போல இருக்கக் கூடிய இந்த வெங்காய சட்னி இதே மாதிரி அளவுகளில் நீங்களும் செய்து பாருங்கள், ரொம்பவே ருசியாக இருக்கும். இதை இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம். சுலபமாக மிக்ஸி ஜாரில் அரைத்து தாளித்து செய்யக் கூடிய இந்த சுவையான வெங்காய சட்னி நாமம் எப்படி வீட்டில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – இரண்டு, சின்ன வெங்காயம் – 20 பல், புளி – ஒரு சிறு எலுமிச்சை பழம் அளவு, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

வெங்காய சட்னி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 20 சின்ன வெங்காயத்தை தோலுரித்து எளிதாக அப்படியே முழுதாக சேருங்கள். பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்கும் பொழுது வெங்காய சட்னி ரொம்பவே ருசியாக இருக்கும்.

பின்னர் காரத்திற்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள் தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு சிறு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறு துண்டு வெல்லத்தையும் சேர்த்தால் வெங்காயத்தின் பச்சை வாசம் போகும். இப்பொழுது மிஸ்ஸியை இயக்கி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியான பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு வாணலி ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
டீ குடிக்கும் பொழுது பிரட் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்ய 10 நிமிஷம் கூட ஆகாது செஞ்சு சாப்பிட்டு பாருங்க, இவ்வளவு நாளா இதை அனுபவிக்காம விட்டுட்டோமேன்னு நினைப்பீங்க!

பின்னர் எண்ணெய் பிரியும் வரை எண்ணெயிலேயே நன்கு வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து மேலே தெளிந்து வரும் அந்த அளவிற்கு பக்குவமாக நன்கு கலந்து விடுங்கள். சட்னி கெட்டியான தொக்கு போல வரும் அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அவ்வளவுதான், இந்த சுவையான வெங்காய தொக்கு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி உங்க வீட்டில் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -