பொதுவாகவே உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது இது பெரியவர், சிறியவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருமே உளுந்தை எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இந்த உளுந்து மிகப் பெரிய ஒரு வரப்பிரசாதம். அதிலும் கருப்பு உளுந்தின் தோலில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் பெண்களுக்கு மிக மிக நல்லது. இந்த உளுந்தை தினம் பெண்கள் தங்கள் உணவுகளில் சேர்த்து வந்தால் அவர்களுக்கு எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கை கால் வலி, போன்ற எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஆண்களுக்கும் இது மிகவும் நல்லது தான் . ஆனால் பெண்களை இந்த பிரச்சனைகள் வெகுவாக தாக்கும் என்பதால் தான் பெண்களுக்கு உளுந்தை அதிகம் எடுத்துக் கொள்ள சொல்வார்கள். அப்படி ஒரு சத்து மிகுந்த ஆரோக்கியமான உளுந்தை வைத்து ஒரு அருமையான சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து உடைத்தது – 4 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, காஷ்மீரி சில்லி – 2, பூண்டு உரிக்காதது – 2, சின்ன வெங்காயம் – 10, புளி – கொட்டை பாக்கு அளவு, உப்பு – 1/4 டீஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 1 ஸ்பூன்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பேனை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்தை அதில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக வெள்ளை உளுந்து தான் இருக்கிறது என்றால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கருப்பு உளுந்து சேர்க்கும் போது சுவை நன்றாக இருக்கும் அதே சமயம் கருப்பு உளுந்தின் தோளில் தான் அதிக சத்து நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவிற்கு கருப்பு உளுந்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது உளுந்து நல்ல பொன்னிறமாக மாறி நல்ல வாசனை வரும் வரை வறுத்த பிறகு அதில் காஷ்மீரில் சில்லி, காய்ந்த மிளகாய் 4,பூண்டு, புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். இவையெல்லாம் வதங்கிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள் கொஞ்ச நேரம் ஆறட்டும்.
மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து அதே பேனையை வைத்து இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியவுடன் அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆறிய உடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை தாளிக்க அடுப்பை பற்ற வைத்து தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்த உடன் மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து அதையும் இந்த சட்னியில் சேர்த்து விடுங்கள் அருமையான சத்து மிக்க உளுந்து சட்னி ரெடி.
இதையும் படிக்கலாமே: தண்ணி சட்னி எல்லோரும் கேள்விப்பட்டு இருப்பீங்க. இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, அப்புறம் எப்போ இட்லி தோசை செஞ்சாலும் அதுக்கு இந்த தண்ணி சட்னி தான் சைடிஷா செய்வீங்க
இந்த சட்னியை சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் குழந்தைகளுக்கும் கூட கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அதிக ஆரோக்கியமாகவும் இப்படி செய்து கொடுங்கள்.