தண்ணி சட்னி எல்லோரும் கேள்விப்பட்டு இருப்பீங்க. இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க, அப்புறம் எப்போ இட்லி தோசை செஞ்சாலும் அதுக்கு இந்த தண்ணி சட்னி தான் சைடிஷா செய்வீங்க.

- Advertisement -

நம் உண்ணும் சிற்றுண்டி வகைகளிலே மிகவும் முக்கியமானது என்றால் அது இட்லி,தோசை தான். இந்த இட்லி தோசைக்கு இப்போது எல்லாம் என்னென்னவோ பல வகை சைடிஸ்களை செய்து சாப்பிட பழகி விட்டோம். ஆனாலும் பாரம்பரியமாக செய்தது இட்லி தோசை என்றால் அதற்கு சட்னி சாம்பார் என்பது தான். அந்த சட்டினியும் கூட பல வகையில் உண்டு. அதில் கொஞ்சம் வித்தியாசமாக அதிக அளவில் பொருட்கள் சேர்க்காமல் நல்ல ருசியான இந்த தண்ணீர் சட்னி எப்படி அரைப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 6, வெங்காயம் -1, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், பொட்டுக் கடலை – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

இந்த சட்னி அரைப்பதற்கு முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனை வைத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மிளகாயின் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீளமாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நல்ல நிறம் மாறி கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். பொன்னிறமாக வதக்க வேண்டாம். வெங்காயம் வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த வெங்காயமும் பச்சை மிளகாய் நன்றாக ஆற விடுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயம், மிளகாய் இரண்டையும் சேர்த்து இத்துடன் தேங்காயும் பொட்டுக்கடலையும் சேர்த்த பிறகு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்து முடித்தவுடன் ஒரு பவுலுக்கு மாற்றி, அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். இந்த சட்னிக்கு பெயரையே தண்ணீர் சட்னி தான். அதனால் தண்ணீராக கொஞ்சம் தாரளமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சட்னி ருசியாகவும் இருக்கும்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்த உடன் அதில் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, கருவேப்பிலையும் சேர்த்த பிறகு பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த தாளிப்பை இந்த சட்னியில் சேர்த்து பரிமாறி சாப்பிடுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நீண்ட நேரமாகியும் கெட்டுப் போகாத தக்காளி சட்னி எப்படி தயாரிப்பது? இப்படி ஒருமுறை தக்காளி சட்னியை வித்தியாசமா செஞ்சு பாருங்க இட்லி, தோசை சப்பாத்திக்கு கூட அட்டகாசமா இருக்கும்.

இதுவரையில் நீங்கள் எத்தனையோ சட்டினி சாப்பிட்டு இருந்தாலும் இத்தனை ருசியாக இவ்வளவு சீக்கிரமாக இப்படி ஒரு சட்னி சாப்பிட்டிருக்கவே முடியாது.

இதன் சுவை அத்தனை அருமையாக இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று உங்களுக்கே தெரியாது,

- Advertisement -