கறுத்து போன பழைய கவரிங் நகைகளை பாலிஷ் போட்டு புதிது போல மாற்ற இனி அதிக பணம் செலவழிக்க தேவையில்லை இந்த சிம்பிள் டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க. எவ்வளவு பழைய நகையாக இருந்தாலும் நிமிடத்தில் பளிச்சென்று மாறி விடும்.

covering jewel cleaning
- Advertisement -

தங்க நகைகளை வாங்கி அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கத் தான் செய்யும். ஆனால் எல்லோராலும் முடியாது அப்படியான சூழ்நிலையில் அவசரத்திற்கு கை கொடுப்பது இந்த கவரிங் நகைகள் தான். சொல்லப் போனால் தங்க நகை வைத்திருப்பவர்கள் கூட கவரில் வரும் விதவிதமான அழகான நகைகளை வாங்கி போடத் தான் செய்கிறார்கள்.

இப்படி ஆசையாய் வாங்கிய நகைகளை போட்டு சிறிது நாட்களுக்கு உள்ளாகவே அது கறுத்து வீணாகி விடும். இதை கடைகளில் கொடுத்து பாலிஷ் போட அதிகமான தொகை கேட்பார்கள். அதற்கு புதிதாகவே வாங்கி விடலாம் என நினைத்து நிறைய பேர் கறுத்துப் போன நகைகளை தூக்கி தூரப் போட்டு விடுவார்கள். இனி அப்படி செய்யாமல் இந்த குறிப்பில் உள்ள டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க, பழைய நகை பாலிஷ் போடது போல டக்குனு புது நகையா மாறிடும்.

- Advertisement -

பழைய கவரிங் நகை புதிது போல மாற்ற
இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை முழுவதுமாக எடுத்து அந்த பௌலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரையும் பௌலில் ஊற்றி விடுங்கள்.

இந்த தண்ணீரில் உங்களிடம் இருக்கும் பழைய கறுத்துப் போன கவரிங் நகையை போட்ட பிறகு தட்டு போட்டு ஒரு பத்து நிமிடம் அப்படியே மூடி வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து தட்டை எடுத்து நகையை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூறையிலேயே பாதிக்கு மேல் அழுக்கு எல்லாம் வெளியேறி இருக்கும்.

- Advertisement -

அடுத்து வேறு ஒரு பௌலில் நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.( இதற்கு பயன்படுத்தும் தண்ணீர் உப்பு தண்ணீராக இருக்கக் கூடாது அதை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்). நாம் ஏற்கனவே ஊற வைத்து நகையை எடுத்து இந்த தண்ணீரில் போட்ட பிறகு கொஞ்சமாக ஷாம்பு அல்லது துணி துவைக்கும் பவுடர் இரண்டில் ஏதாவது ஒன்றை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு டூத் பிரஸ் கொண்டு இந்த நகைகளை லேசாக தேய்த்து கொடுங்கள். ஏனென்றால் நகைகளின் இடுக்குகளில் எல்லாம் கொஞ்சம் அழுக்கு ஒட்டி இருக்கும் அதை சுத்தம் செய்வதற்காகத் தான் இந்த முறை. இப்போது உங்கள் கவரின் நகையை பாருங்கள், இது கறுத்துப் போன நம்முடைய பழைய நகை தானா என்று உங்களுக்கே சந்தேகம் வரும் அளவு நகைகள் பளிச்சென்று மாறியிருக்கும்.

இதையும் படிக்கலாமே: பாத்திரம் தேய்க்கும் முன்பு இதை மட்டும் செய்து விட்டால் இனி உங்க சிங்க் புல்லா அழுக்கு பாத்திரங்கள் நிரம்பி வழிந்தாலும் கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.

இனி கறுத்து போன பழைய நகைகளை எல்லாம் தூக்கி தூர போடாமல், இந்த முறையில் பாலிஷ் செய்து புதுசு போல அணிந்து கொள்ளுங்கள். இந்த வீட்டு குறிப்பு பதிவில் உள்ள டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -