கஷ்டங்களும் கவலைகளும் வீட்டில் நிரந்தரமாக தங்கி இருக்க இதுவும் ஒரு காரணம் தான். உங்கள் வீட்டு பாத்ரூமில் இதை கவனிக்காமல் விட்டுட்டீங்களே.

toilet
- Advertisement -

பொதுவாகவே ஒரு வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அதேபோல அந்த வீட்டின் கழிவறையும் சுத்தமாகத் தான் இருக்க வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகளில் எப்படி எதிர்மறை ஆற்றல் மறைந்து நமக்கு தீமையை கொடுக்கின்றதோ, அதேபோல கழிவறையிலும், பாத்ரூமிலும் பல மடங்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் தங்கியிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு பாத்ரூமுக்கு என்று தனியாக நாம் எந்த ஒரு பரிகாரத்தையும் மேற்கொள்வது கிடையாது. இதன் மூலமாகக் கூட சில பேருக்கு கெட்ட நேரம் வரும்போது கஷ்டங்கள் இரட்டிப்பாக மாறக்கூடும்.

வீட்டில் தொடர் கஷ்டங்கள் இருக்கிறது என்னவென்றே புரியவில்லை. வீடு சுத்தபத்தமாக வாசனையாக தான் உள்ளது என்பவர்கள் கொஞ்சம் பாத்ரூம் பக்கம் திரும்பி இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதை பரிகாரம் என்று சொல்லமுடியாது என்றாலும், உங்களுடைய பாத்ரூமில் கண்ணுக்குத் தெரியாத அழுகை அழிக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலிலாவது முக்கியமான விஷயம். எல்லார் வீட்டு பாத்ரூமும் எப்போதும் இருட்டாகத்தான் இருக்கும். அதாவது இரவு நேரங்களில் பாத்ரூமுக்கு செல்வதாக இருந்தால் கூட லைட் போட்டுகொண்டு தான் பாத்ரூம்க்கு செல்வோம் அல்லவா, அப்படி இல்லாமல் இருட்டாக இருக்கும் சமயத்தில் பாத்ரூமில் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டே இருப்பது மிக மிக நல்லது. நீண்ட நேரம் இருட்டாக இருக்கக்கூடிய இடத்தில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி நிலையாக குடிகொள்ளும். ஆகவே முடிந்த வரை ஒரு சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பை அந்த இடத்தில் எரிய விடுங்கள். அதற்கு கரண்ட் பில் அதிகமாக ஆகாது. பகல் நேரத்தில் இந்த பல்பை அணைத்து விடலாம்.

அடுத்தபடியாக வாரம் ஒருநாள் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை பாத்ரூமில் ஏதாவது ஒரு இடத்தில் ஏற்றி வைத்து விட வேண்டும். அந்த மெழுகுவர்த்தி முழுவதும் எரிந்து அணையும் வரை அப்படியே இருக்கட்டும். ஒரு மணி நேரம் வரை தீபச்சுடர் பாத்ரூமில் எரியும் போது அந்த இடத்தில் இருக்கும் தேவையற்ற எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அழிந்து போகும். மெழுகுவர்த்தி வாங்கி ஏற்ற முடியவில்லையா பாத்ரூமுக்கு என்று ஒரு சின்ன மண் அகல் விளக்கு தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கலாம். தவறே கிடையாது.

- Advertisement -

நாம் குளிக்கும்போது, காலை கடனை முடிக்கும்போது நம் உடம்பிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் போது, அதில் இருக்கும் எல்லா கெட்டதும் சூழ்ந்து இருக்கக்கூடிய இடம் அந்த பாத்ரூம். அதில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அகற்றுவதற்கு எப்போதுமே ஒரு டம்ளரில் உப்பு நீரை வைக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நன்றாக கரைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு இந்த தண்ணீரை பாத்ரூமில் ஏதாவது ஒரு இடத்தில் திறந்தபடி வைக்க வேண்டும். அலமாரியில் வைத்து மூடி விடாதீர்கள். அலமாரியின் மேல் பக்கம் வைத்தாலும் திறந்தபடி வைக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒருநாள் பழைய தண்ணீரை எடுத்து கீழே ஊற்றி விட்டு மீண்டும் இதே போல புதிய தண்ணீரை தயார் செய்து வைக்க வேண்டும். கழிவறை என்பது துர்நாற்றம் வீசக்கூடிய இடம்தான். ஆனால் அந்த இடத்தில் அந்த துர்நாற்றம் வீசாமல் இருக்க எந்த பொருட்களை உங்களால் வைக்க முடியுமோ அந்த பொருளை வாங்கி வையுங்கள். சுத்தமாக இருக்கக்கூடிய பாத்ரூம் நிச்சயமாக வாசமாகவும் இருக்க வேண்டும். அதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இது எல்லாம் ஒரு பரிகாரமா என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால் பாத்ரூமில் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தி நிச்சயம் நம் வீட்டிற்கு பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்கும். இந்த சின்ன பரிகாரத்தை ஒரே ஒரு வாரம் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -