காசிக்குப் போக முடியாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று, இந்த தீர்த்தத்தில் குளித்தாலே போதும். நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். காசிக்கு நிகராக சொல்லப்படும் அந்த கோவில் எது?

sivan4
- Advertisement -

அந்த காலத்தில் செய்த பாவங்களை எல்லாம் கழிக்க வேண்டும் என்றால், காசிக்கு சென்று கங்கை நதியில் நீராடுவார்கள். அதாவது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, தங்களுடைய கடமையை முடித்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையின் இறுதி காலத்தில்தான் காசிக்கு சென்று பாவ விமோசனம் தேடிக் கொள்வார்கள். காசிக்கு சென்றவர்கள் திரும்பி வந்தால் சரி. அப்படி இல்லை என்றால் காசியிலேயே தங்களுடைய உயிரை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த புண்ணிய ஸ்தலத்தில் இறுதியில் உயிர் விடுவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. நாம் காசிக்கு சுற்றுலா பயணம் செய்வது போல வயது வரம்பு இல்லாமல் சென்று வருகின்றோம். கால சூழ்நிலை நாகரீக வளர்ச்சி இதையும் மாற்றி விட்டது.

காசிக்கு சென்று பாவத்தை கழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?
சரி, வாய்ப்பு இருப்பவர்கள் காசிக்கு சென்று கங்கை நதியில் நீராடி பாவத்தை கழித்துக் கொள்கிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் பணம் காசு இல்லாதவர்கள் என்ன செய்வது. தங்களுடைய பாவ கணக்கை எப்படி போக்கிக் கொள்வது. காசிக்கு நிகராக சொல்லப்படும் தென்காசி சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும், காசியில் இருக்கும் கங்கை நதியில் நீராடிய பலனை பெற முடியும் என்று சொல்கிறது நம்முடைய இந்து சாஸ்திரம்.

- Advertisement -

முதலில் தென்காசியில் இருக்கும் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு, அந்த கோவிலில் இருக்கும் தீர்த்தத்தில் நீராடி விட்டு, அன்றைய தினமே பாபநாசம் சென்று அந்த அருவியிலும் குளித்துவிட்டு, அங்கு இருக்கும் சிவனையும் தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பும் போது நீங்கள் செய்த ஊழ்வினை கர்மாக்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டு கோவிலும் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும்.

காசிக்கு செல்ல முடியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த இரண்டு திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்துவிட்டு, இந்த இரண்டு திருத்தலங்களில் இருக்கும் தீர்த்தத்திலும் ஒரே நாளில் குளித்து விட்டாலே போதும். உங்கள் பாவங்கள் தீரும். நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினை நம்மை பின் தொடர்ந்தாலும், நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினை நம்மை பின் தொடர்ந்தாலும், அதிலிருந்து விடுபட ஆன்மீகம் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

- Advertisement -

கோவிலுக்கு செல்வது சுவாமி கும்பிடுவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு, உங்களால் முடிந்தவரை 10 ஏழை மக்களுக்கு உங்கள் கையால் அன்னதானம் செய்யுங்கள். பலனை இரட்டிப்பாக பெறுவீர்கள். இப்படி எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும் குலதெய்வ வழிபாட்டை மறக்கக்கூடாது. குலதெய்வ கோவிலுக்கு சென்று அதன் பிறகு இப்படி பரிகார ஸ்தலங்களுக்கு சென்றால் ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: கோடி கடனும் காணாமல் போக சாம்பிராணி தூபத்தில் இதை சேர்த்தால் போதும். இதுவரை தீர்க்க முடியாமல் திணறிய கடனையும் விரைவில் அடைக்க கூடிய சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம்.

பரிகாரம் தெரியும். அதற்காகத் தெரிந்தே பாவத்தை செய்துவிட்டு இந்த நதியில் போய் நீராட்டி விட்டு வரலாம் என்று மட்டும் நினைக்காதீங்க. நீங்கள் செய்த பாவத்தை யாரும் பார்க்கவில்லை. ஆனால் மனசாட்சியும் அந்த கடவுளும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அறிந்து யாருக்கும் பாவம் நினைக்க கூடாது. அறியாமல் தெரியாமல் செய்த பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் தண்டனைகள் குறையும். ஆனால் செய்த தவறுக்கு தண்டனை இல்லாமல் ஒரு போதும் நிச்சயம் தப்பிக்க முடியாது. இது நிதர்சனமான உண்மை. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் எந்த துன்பமும் இருக்காது. நாம் அடுத்தவர்களுக்கு துன்பம் செய்தால் தானே நமக்கு துன்பம் வரும். இதை நம்முடைய மனதில் நிறுத்தி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -