அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் தீபம்

ven kadugu deepam
- Advertisement -

யாருக்கு தான் கஷ்டம் இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி தான் வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தாங்க முடியாத அளவுக்கு துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படும் பொழுது எந்த தீபத்தை ஏற்றினால் நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணக்கஷ்டம், தொழில் கஷ்டம், குடும்பத்தில் உறவுகளின் பிரிவினை, தீய சக்திகளின் ஆதிக்கம், வேலையில் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, கடன் பிரச்சனை, வீடு மனை அமையாமல் இருப்பது என்று பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு நமக்கு தைரியமும் தெம்பும் இருந்தால் சமாளித்து விடுவோம். அதையும் தாண்டி நம்மால் சமாளிக்க முடியாத பட்சத்தில் நாம் கடவுளிடம் சரணாகதி அடைவோம்.

- Advertisement -

பொதுவாக வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது, சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது என்றால் வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக அர்த்தம். அவ்வாறு தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அதை வெளியேற்றுவதற்குரிய முறையான பரிகார வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த பிரச்சனையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

வெண்கடுகு தீபம்
பொதுவாக சாம்பிராணி தூபம் போடும் பொழுது நாம் வெண்கடுகையும் சேர்த்து தூபம் போடுவோம். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட வெண்கடுகை வைத்து தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை படிப்படியாக குறைந்து முற்றிலும் தீர்ந்துவிடும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இதற்கு முதலில் நாம் வெண்கடுகை வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளை நிற துணியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் வெண்கடுகை வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இதை தான் நாம் திரியாக உபயோகப்படுத்தப் போகிறோம்.

சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவோம் அல்லவா அதே போல் தான் வெண்கடுகு தீபத்தையும் நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் வீட்டில் தீபம் ஏற்றக்கூடிய எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த தீபத்தை நம் வீட்டு வாசலில் அதாவது கோலம் போடும் இடத்தில் ஏற்ற வேண்டும். அதுவும் மாலை நேரத்தில் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பொதுவாக நாம் தீபத்தை ஏற்றும் போது அந்த தீபத்திரியில் கற்பூரத்தை வைத்து ஏற்றுவோம். அவ்வாறு கற்பூரத்தை வைப்பதற்கு பதிலாக பச்சை கற்பூரத்தை வைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தினமும் மாலை 6 மணிக்கு இந்த தீபத்தை நம் வீட்டு வாசலில் ஏற்ற வேண்டும்.

இவ்வாறு ஏற்றுவதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும் அனைத்தும் விலகி ஓடும். மனதாலும், உடலாலும், பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இயல்பான நிலைக்கு திரும்ப வருவார்கள்.

இதையும் படிக்கலாமே: முயற்சிகள் வெற்றி அடைய மரமும் மந்திரமும்

இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்றி நம் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் விலக்கி நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தலாம்.

- Advertisement -