வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் என்பது இருக்கும். ஒரு சில பிரச்சினைகள் வெளிப்படையாக தெரிந்துவிடும். ஒரு சில பிரச்சினைகள் வெளியில் தெரியவே தெரியாது. அதை யாரிடமும் கூறவும் முடியாது. மனதிற்குள் போட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். அப்படி தீர்க்க முடியாத கஷ்டமாக இருந்தாலும் பிறரிடம் சொல்ல முடியாத கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய ஒரு சிறப்பான கல் உப்பு வழிப்பாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்கள் விலக கல் உப்பு பரிகாரம்
கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்றும் அது எதிர்மறை ஆற்றலை விலக்கக் கூடிய ஒன்று என்றும் நம் அனைவருக்கும் தெரியும். பலரும் தங்களுடைய வீட்டை துடைக்கும் பொழுது துடைக்கும் தண்ணீரில் கல் உப்பை கரைத்து துடைப்பார்கள் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். அந்த அளவிற்கு கல் உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய சக்திகள் என்பது இருக்கிறது. அப்படிப்பட்ட கல் உப்பை வைத்து நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே கல்லுப்பு கரைவது போல் கரைந்து போய்விடும்.
இந்த வழிபாட்டை நாம் முருகப்பெருமானின் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் நாம் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்யும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நம்முடைய இரண்டு கைகள் நிறைய கல் உப்பு வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து அது நிரம்ப கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு முருகப்பெருமானின் சன்னதியை ஆறு முறை முழுமனதோடு வலம் வர வேண்டும். ஆறு முறை வலம் வந்த பிறகு கோவிலில் கண்டிப்பான முறையில் ஒரு இடத்தில் கல் உப்பு, மிளகு போட்டு வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் கல் உப்பை வைத்துவிட்டு ஏழாவது முறையாக அடி பிரதட்சணம் செய்ய வேண்டும். அவ்வாறு அடி பிரதட்சணம் செய்யும்பொழுது வேல் மாறல் படிக்கலாம் அல்லது வேலுக்குரிய மந்திரத்தை கூறிக்கொண்டு செல்லலாம். இவ்வாறு செய்து முடித்துவிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து தங்களுடைய கஷ்டங்கள் என்னவோ அவை அனைத்தும் நீங்க வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றலும் விலகி நன்மைகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: தொல்லைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு
கஷ்டங்கள் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது அல்லவா? தங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து இந்த முறையில் கல் உப்பை வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.