- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களையும், கடனையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கஷ்டங்களையும், கடனையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த திதி என்று ஒரு திதி இருக்கும். அந்த திதியில் அந்த தெய்வத்தை நினைத்து நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் விநாயகப் பெருமானுக்கு உரிய திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு சதுர்த்திகள் வந்தாலும் தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சங்கட ஹர சதுர்த்தி நாளன்று எந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மிகவும் எளிமையான தெய்வமாக கருதப்படக் கூடியவர் விநாயகர் பெருமான். இவரை வழிபாடு செய்வதற்கென்று பெரிதாக நாம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை நம்மிடம் இருக்கக்கூடிய எதை வைத்து எப்படி வழிபட்டாலும் முழு மனதோடு வழிபட்டால் அவரின் அருள் கண்டிப்பான முறையில் நமக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகர் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தி என்பது கார்த்திகை மாதத்தில் செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபட்டால் நம்முடைய சங்கடங்களோடு சேர்த்து கடன் பிரச்சினையும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஒருவர் கடனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றார், அவர் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியும். ஆதனால் செவ்வாய்க்கிழமை என்பது கடன் பிரச்சனையை தீர்க்கக் கூடிய கிழமையாக திகழ்கிறது அந்த கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்களும் அதே சமயம் கடன் பிரச்சினையும் தீரும் என்றே கூறலாம்.

இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் வழிபாட்டை மட்டும் செய்பவர்களும் இருக்கிறார்கள். விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய விரதத்தை மாலை நேரத்தில் தான் பூர்த்தி செய்ய வேண்டும். வழிபாடு மட்டும் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த வழிபாட்டை அவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது காலை 7:45 இல் இருந்து 8:45 வரை அல்லது 10:45 இல் இருந்து 11 45 வரை அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிபாட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் சிலையையோ அல்லது விநாயகரின் திருவுருவப்படத்தையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து கண்டிப்பான முறையில் அருகம்புல் மாலையை சாற்ற வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய தேன், அவல், பொரி கடலை, பழங்கள், சுண்டல் வகைகள், இனிப்பு வகைகள் என்று நம்மால் எது முடியுமோ அதை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இரண்டு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு விநாயக பெருமானுக்கு முன்பாக அமர்ந்து “ஓம் விக்னேஸ்வராய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிக்கும் பொழுது அருகம்புல்லால் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வது என்பது கூடுதல் பலனை தரும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் வாங்கி கொடுப்பதும், அன்னதானம் செய்வதும் அதிக பலனைத் தரும்.

இதையும் படிக்கலாமே:தடைகள் விலக குலதெய்வ வழிபாடு
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் அவரை சரணாகதி அடைந்து செய்பவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டங்களும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்