சக்தி வாய்ந்த தெய்வங்களில் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றக் கூடிய தெய்வம் குலதெய்வம். இந்த குலதெய்வத்திற்கு இப்படி ஒரு வழிபாடு செய்வதன் மூலம் இப்போது இருக்கும் அத்தனை தடைகளும் விலகி தவிடுபொடி ஆகும். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம். குலதெய்வ வழிபாட்டின் பொழுது முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது என்ன? என்பதை தொடர்ந்து நான் ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு ஒரு கஷ்டம், துன்பம் என்றால் முதலில் நீங்கள் வழிபட வேண்டியது உங்களுடைய குல தெய்வத்தை தான். குலதெய்வம் அறியாதவர்கள் உண்மையில் பாவப்பட்டவர்கள் என்று கூறலாம். குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு அளப்பரிய நன்மைகளை செய்யக் கூடியது. வாழ்க்கையில் இருக்கும் தடைகளை அகற்றி நம்மை இன்ப மயமான வாழ்க்கைக்கு மாற்றக் கூடிய இந்த வழிபாட்டை எப்படி செய்யலாம்? பார்ப்போம்.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன்பு முதலில் ஒரு ஆழாக்கு அளவிற்கு பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். நன்கு பச்சரிசி ஊறியவுடன் அதனை உலர்த்தி இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இடித்து வைத்த மாவை சலிக்கக் கூடாது. சலிக்காத இந்த பச்சரிசி மாவில் வெல்லத்தை பொடித்து சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனைத் துள்ளு மாவு என்பார்கள்.
இந்த துள்ளு மாவை குலதெய்வ கோவிலுக்கு கொண்டு சென்று அங்குள்ள தெய்வத்திற்கு படைத்து நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். வழிபாடுகள் எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் பிரகாரத்தை சுற்றிலும் ஆங்காங்கே அந்த மாவினை ஓரிரு இடங்களில் பிரித்துப் போட்டு விடுங்கள். இதனை உண்ண வரும் எறும்புகள் மூலம் நம்முடைய தாங்க முடியாத துயரங்களும், வலிகளும் தீரும், தடைகள் அகலும் என்பது ஐதீகம்.
நீங்கள் மாவை போட்டவுடனே எறும்புகள் வர ஆரம்பிக்கும். இப்படி உடனுக்குடன் எறும்புகள் வந்து இறை தேடி நீங்கள் போட்டதை சாப்பிட வந்தால், உங்களுக்கு குலதெய்வ ஆசீர்வாதம் பரிபூரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். சற்று கால தாமதம் ஆனால் ஏதோ ஒரு குலதெய்வ குறைபாடு வைத்திருக்கிறீர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஜீவராசிகள் எதுவும் உண்ண வரவில்லை என்றால் கண்டிப்பாக குலதெய்வ சாபத்திற்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே:
வீட்டில் ஐஸ்வர்யம் சேர்க்கும் பால்
குலதெய்வ சாபம் இருப்பவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதற்கு 21 ஏழைகளுக்கு குலதெய்வ கோவில் அமைந்திருக்கும் மண்ணிலேயே அன்னதானம் அளியுங்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இந்த அன்னதானத்தை விட சிறந்த தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரம் எதுவுமே இருக்க முடியாது. 21 பேருக்கு மனம் உகந்து அறுசுவை உணவுடன் அன்னத்தை தானம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வ சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. வருடம் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தொடர்ந்து குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் இல்லத்தில் தடைகள் என்பது இருக்கவே செய்யாது. குலதெய்வ மண்ணை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு வாருங்கள். பூஜையறையில் வைத்து தொடர்ந்து தூப, தீப, ஹாரத்தி காண்பித்து வழிபடுங்கள். உங்களை அழிக்க காத்திருப்பவர்களை இம்மண் அழித்து உங்கள் தடைகளை அகற்றும்.