- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சுவையான கத்தரிக்காய் வதக்கலை ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுலபமான முறையில் அட்டகாசமான...

சுவையான கத்தரிக்காய் வதக்கலை ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுலபமான முறையில் அட்டகாசமான சுவை கிடைக்கும்.

- Advertisement -

கத்தரிக்காய், அடிக்கடி நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய ஒரு பதார்த்த வகை. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதும் கூட. இதை சுலபமான முறையில் எல்லோருக்கும் பிடிக்கும் படி எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி செய்தால் கத்திரிக்காயை பிடிக்காதவர்கள் கூட நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. முதலில் ஒரு 8 லிருந்து 10 கத்தரிக்காய்களை நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி, கத்தரிக்காய்களை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

kathari

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். நல்லெண்ணை 3 டேபிள் ஸ்பூன் அளவு தேவைப்படும். எண்ணெய் கொஞ்சம் அதிகமாக இருந்தால்தான் சுவையும் கூடுதலாக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/4 ஸ்பூன், உளுந்து – 2 ஸ்பூன், சேர்த்து சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்தபடியாக கருவேப்பிலை ஒரு கொத்து, பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1 சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயத்துடன் உப்பு – 1/4 ஸ்பூன், சர்க்கரை – 1/4 ஸ்பூன் சேர்த்து இரண்டு நிமிடம் போல வதக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரையை தவிர்க்க வேண்டாம். சர்க்கரை சேர்த்து செய்யும் போது இந்த கத்தரிக்காய் வதக்கல் வித்தியாசமான சுவை கிடைக்கும்.

katharikai-vathakal2

அடுத்தபடியாக தண்ணீரை வடிகட்டி நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை கடாயில் சேர்த்து எண்ணெயில் 2 நிமிடங்கள் வதக்கி விடுங்கள். இதில் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், சாம்பார் பொடி – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு இந்த பொருட்களை சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை தெளித்து ஒரு மூடி போட்டு 5 நிமிடம் போல கத்தரிக்காய்களை வேக வைத்தால் போதும்.

- Advertisement -

5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து அடுப்பை சிம்மில் வைத்து கத்தரிக்காய்களை எண்ணெயில் நன்றாக சிவக்க வைத்து எடுக்கவேண்டும். கத்தரிக்காய்கள் அனைத்தும் வெந்து சுருண்டு சுருங்கி வரும் பக்குவத்தில், பச்சை கறிவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான கத்தரிக்காய் வதக்கல் தயார். சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும்போது இதன் ருசி அலாதியாக இருக்கும். மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

katharikai-vathakal1

கத்தரிக்காயை கழுவி விட்டு தண்ணீரை சரியாக வடிகட்டாமல், இந்த வதக்களில் சேர்த்து விட்டால் கத்தரிக்காய் கொழகொழவென மாறிவிடும். கத்திரிக்காயை எண்ணெயில் நன்றாக வதக்கவேண்டும். இந்த ரெசிபிக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்யும் போது நல்ல மணம் இருக்கும். கத்தரிக்காயை வெட்டும் போது கொஞ்சம் மொத்தமாக வெட்டிக் கொள்ளுங்கள். ரொம்பவும் மெல்லிசாக வெட்டி விடும் பட்சத்தில் கத்தரிக்காய்கள் சீக்கிரமே குழைந்து போய்விடும். இந்த சின்ன சின்ன டிப்ஸை பின்பற்றினாலே போதும் கத்தரிக்காய் வதக்கல் அட்டகாசமாக கிடைக்கும்.

சற்று முன்