பெற்றோர் சொல் கேட்டு பிள்ளைகள் நடக்க, பிள்ளைகள் கெட்ட வழியில் செல்லாமல் இருக்க, உங்களுடைய வீட்டில் இந்த 1 தீபத்தை ஏற்றி வையுங்கள் போதும்.

deepam
- Advertisement -

இந்த காலத்தில் பெரும்பாலும் பிள்ளைகள், பெற்றவர்களுடைய பேச்சைக் கேட்பதே கிடையாது. எதை செய்யாதே என்று சொல்கிறோமோ, முதலில் அதை தான் போய் செய்கிறார்கள். நல்லது கெட்டதை புரிந்து புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க. அடங்காத பிள்ளைகளை, உரிமையோடு அடக்கக் கூடிய சக்தியும் இந்த காலத்தில் பெற்றவர்களுக்கு கிடையாது. பெற்றவர்களுடைய கண்டிப்பின் மூலம் பிள்ளைகளுடைய மனது வேதனை படுமோ, அதனால் அவர்கள் ஏதேனும் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்களோ, என்று பெற்றவர்களுக்கு இருக்கக்கூடிய பயமும் ஒரு காரணம் தான். காலம், கலிகாலம் ஆக மாறிவிட்டது. பிள்ளைகள், பெற்றோரின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்பது இயல்பான ஒரு விஷயம். ஆனால், அதற்காக நாம் பரிகாரம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என்ன செய்வது. பிள்ளைகள், பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் தடுமாறி, தடம் மாறிப் போய் விடக்கூடாது அல்லவா.

katralai

பிள்ளைகள் பெற்றோர் சொல்படி கேட்க வேண்டும் என்றாலும் சரி, கணவன் மனைவியின் சொல்படி கேட்க வேண்டும் என்றாலும் சரி, மனைவி கணவன் சொல்படி கேட்க வேண்டும் என்றாலும் சரி, அல்லது உங்களுடைய உறவுகளில் எந்த உறவுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் சரி, அந்த கருத்து வேறுபாட்டில் இருக்கும் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை நிலவ இந்த தீபத்தை உங்களுடைய வீட்டிலேயே தாராளமாக ஏற்றலாம்.

- Advertisement -

இந்த தீபத்திற்கு பெயர் கற்றாழை தீபம் என்று சொல்லுவார்கள். கஷ்டம் எல்லாம் எதுவும் கிடையாது. இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த இரண்டு மண் அகல் தீபம் நடுவே ஒரு கற்றாழை துண்டை கொண்டுவந்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான். இதுதான் கற்றாழை தீபம்.

family1

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார வேண்டி, எந்த 2 நபருக்கு பிரச்சினை வரக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அவர்களை மனதார நினைத்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரக்கூடாது என்று நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு உங்கள் பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமென்றால் ‘என் மகன் அல்லது மகள், என் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகளை அவன் காது கொடுத்து கேட்க வேண்டும். எனக்கும் என் மகனுக்கும் இடையே கருத்துவேறுபாடு வரக்கூடாது’ என்றபடி உங்களுடைய கோரிக்கையை இறைவனிடம் வைக்கலாம்.

- Advertisement -

அந்த காலத்தில் பஞ்சாயத்து செய்யும் போது, பஞ்சாயத்தில் இருக்கும் இரு பிரிவினருக்கும் வரக்கூடிய கருத்து வேறுபாட்டை சரி செய்ய இந்த தீபத்தை ஏற்றி வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த தீபத்தை ஏற்றி முயற்சி செய்து பாருங்கள்.

agal-vilakku-deepam

நாள் கிழமை எல்லாம் உங்களுடைய விருப்பம் தான். உங்களுடைய வீட்டில் எப்போதெல்லாம் இந்த தீபத்தை ஏற்ற முடியுமோ, அப்போதெல்லாம் ஏற்றி வையுங்கள். தீபம் எரியும் வரை கற்றாழை தீபத்தின் அருகில் இருந்தால் போதும். ஒவ்வொரு முறை தீபம் ஏற்றும் போதும் புதிய கற்றாழையைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். பழைய கற்றாழையை கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். தொடர்ந்து ஒரு 11 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றும் பட்சத்தில் உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நிச்சயம் வித்தியாசம் தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -