தண்ணீரை ஜெல்லியாக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ

Kattukodi mooligai
- Advertisement -

நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான கலைகள் தான் “சித்த மருத்துவம்” மற்றும் “ரசவாதம்”. கடல் போல் பெரிதான இந்த இருக்கலைகளிலும் ஒருவர் தேர்ச்சி பெறுவதற்கு, பல ஆண்டுகள் காலம் அனுபவம் வாய்ந்த ஒரு சித்த குருவிடம் குருபக்தியுடன் கற்றால் மட்டுமே இக்கலைகள் ஒருவருக்கு சித்திக்கும். ஆனால் இந்த மருத்துவ கலையில் உள்ள மூலிகைகள் சிலவற்றை நமது உடனடி தேவைக்காக பயன்படுத்தலாம். அந்த வகையில் கட்டுக்கொடி எனப்படும் மூலிகையின் சில சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த கட்டுக்கொடி மூலிகை சித்தர்கள் தங்களின் சித்த மருத்துவத்திலும் மற்றும் ரசவாத கலையிலும் பயன்படுத்தினர். இந்த மூலிகை ஒரு குளிர்ச்சி தரும் மூலிகை ஆகும். இதை சீத பேதி மற்றும் ரத்த பேதி போன்ற வயிறு சம்பந்தமான நோய்களை உடனடியாக போக்க கூடியது. இந்த மூலிகை ஒரு சிறந்த ஆண்மை பெருக்கி ஆகும். ஆண்மை குறைபாடு கொண்டவர்கள் இந்த மூலிகையை அடிக்கடி பக்குவம் செய்து உண்டு வர நல்ல பலன் கிடைக்கும். இந்த கட்டுக்கொடி மூலிகையை காப்புக்கட்டி வழிபட்டு, வழிபட்டு சாப நிவர்த்தி செய்து இச்செடியின் இலைகளை பயன்படுத்தி ரசமணிகளை தயாரித்தனர் சித்தர்கள்.

கட்டுக்கொடி பொதுவாக கிராமங்களில் மற்றும் காட்டுப்பகுதி அதிகம் கொண்ட ஊர்களில் ஏதேனும் ஒரு மரத்தில் படர்ந்து வளரும் கொடி வகையை சார்ந்தது. இந்த கட்டுக்கொடி மூலிகை பல மருத்துவ மற்றும் சித்த மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை ஆகும். இந்த கட்டுக்கொடி குறிப்பாக இச்செடியின் இலைகள் மற்றும் வேர் தண்டுகள் பல பல்வேறு ஆற்றல்களை கொண்டது.

இக்காணொளியில் காட்டியுள்ளபடி இம்மூலிகையின் இலைகளை தேவையான அளவுக்கு பறித்து கொள்கிறார் இந்நபர். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீரை எடுத்துக்கொள்கிறார். இதன் கசப்பு சுவையை போக்க சிறிது சர்க்கரையை அதில் சேர்த்துக்கொள்கிறார். பின்பு அந்நீரில் இந்த கட்டுக்கொடி இலைகளை போட்டு நன்றாக கசக்கி, அதன் சாற்றை அந்த பாத்திரத்தின் நீரிலேயே கலக்கச் செய்கிறார். சில நிமிடங்களில் அந்த இலைகளின் மொத்த சாற்றையும் எடுத்து அந்த மூலிகை சாறு கலவை கொண்ட நீரை வடிகட்டி கொள்கிறார். பின்பு அந்த மூலிகை நீரை ஒரு குடுவையில் ஊற்றிக்கொள்கிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த மூலிகை நீர் ஆங்கிலத்தில் “ஜெல்லி” என்று அழைக்கப்படும் வழவழப்பான உணவு பொருள் போல் மாறிவிடுகிறது. இக்காணொளியில் காட்டியுள்ள படி இந்த கட்டுக்கொடி மூலிகையை பக்குவம் செய்து உட்கொண்டால் நமக்கு மேற்கூறிய நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -