உங்கள் வீட்டு குலதெய்வம், காவல் தெய்வமா? வழிபாட்டில் இந்த ஒரு விஷயம் இல்லை என்றால் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வராது.

kula-dheivam-thirupathi-perumal
- Advertisement -

முக்கால்வாசி பேருக்கு குலதெய்வங்கள், காவல் தெய்வமாகத்தான் இருக்கும். அதாவது ஊர் எல்லையில் இருக்கக்கூடிய தெய்வத்தை குலதெய்வமாக வழிபாடு செய்வார்கள். கிராமப்புறங்களில் ஐயனார், முனீஸ்வரர், சுடலைமாடன், இருளாயி, காட்டேரி, இசக்கியம்மன், போன்ற இன்னும் பல வகையான எல்லை தெய்வங்களை குலதெய்வமாக கொண்ட குடும்பங்கள், குலதெய்வ வழிபாட்டில் கட்டாயமாக பின் சொல்லக்கூடிய இந்த விஷயத்தை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் குலதெய்வத்தின் அருளாசியை நிறைவாக பெற முடியும்.

வீட்டில் தினந்தோறும் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்யும்போது, குடும்பத் தலைவிகள் முதலில் குலதெய்வத்தின் நாமத்தை தான் மூன்று முறை உச்சரிக்க வேண்டும். உங்கள் வீட்டு குலதெய்வம் காவல் தெய்வமாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற ஏதாவது தெய்வமாக இருந்தாலும் சரி, தினமும் விளக்கு ஏற்றும்போது குல தெய்வத்தை மனதில் நிலைநிறுத்தி விளக்கு ஏற்றி, குலதெய்வம் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

- Advertisement -

காவல் தெய்வ, குலதெய்வத்தை வழிபாடு செய்யும் முறை:
வருடத்தில் ஒரு நாள், ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு நாள் குலதெய்வத்திற்கான வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு குலதெய்வத்திற்கு, உங்கள் வீட்டு முறைப்படி நீங்கள் எப்படி பூஜை செய்வீர்களோ, அதே போல பூஜை செய்து வழிபாடு செய்வதற்கு முன்பாக உங்கள் வீட்டு கொள்ளை பக்கம் சென்று, உங்கள் வீட்டு காவல் தெய்வமான அந்த குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து ‘குலதெய்வமே வீட்டிற்கு வர வேண்டும்’ என்று முழு மனதோடு சத்தம் எழுப்பி குலதெய்வத்தை மூன்று முறை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

காவல் தெய்வங்கள் நம் வீட்டு பின் வாசலில் இருக்கும் மரத்தில் தான் வசிக்கும். நாம் கூப்பிட்ட குரலுக்கு நம்முடன் வந்து நம் வீட்டுப்படையலை ஏற்றுக் கொள்ளும். பிறகு பூஜை முடிந்தவுடன் நம்மை காப்பதற்கு நம் வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் போய் மீண்டும் குடியிருக்கும் என்பதுதான் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது.

- Advertisement -

நிறைய பேர் குடியிருக்கும் வீட்டில் எல்லாம், சொந்த வீட்டை போல கொள்ளை பக்கம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. பெரும்பாலான வீடுகள் இப்போது கொள்ளை புறம் இல்லாமல் தான் இருக்கிறது. கொள்ளை புறம் இல்லாதவர்கள், உங்கள் வீட்டின் பின்பக்கம் நின்று கொண்டு ஜன்னல் இருந்தால் ஜன்னல் அருகிலோ, அப்படி எதுவுமே இல்லை என்றால் வெறுமனே வீட்டிற்கு பின்பக்கத்தில் இருந்து குலதெய்வத்தை அழைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதனால் தவறு ஒன்றும் கிடையாது.

மற்றபடி காவல் தெய்வங்கள் அல்லாமல் காமாட்சியம்மன், முருகர், பெருமாள், இவர்களை குலதெய்வமாக கொண்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை சாதாரணமாக வீட்டில் அவர்களுக்கு என்று தனியாக ஒரு நாள் பூஜை செய்தால் போதுமானது. வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக அங்காளி பங்காளிகளோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை உங்கள் வீட்டு முறைப்படி தான் வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செலவு செய்யும் 1 ரூபாய் கூட 1000 ரூபாயாக உங்களுக்கு திருப்பி கிடைக்க இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள் போதும். பணம் பல மடங்கு பெருகும்.

உங்கள் வீட்டு முறையைத் தாண்டி புதுசாக எந்த விஷயத்தையும் நீங்கள் குலதெய்வத்திற்கு செய்யக்கூடாது. வழி வழியாக செய்து வந்த பழக்கத்தை மாற்றவும் கூடாது. உங்கள் வீட்டு பழக்க வழக்கத்தை உங்களுக்கு பிறகு இருக்கும் உங்களுடைய சந்ததியினருக்கும் சரியானபடி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டிய விஷயம். ஏனென்றால் உங்களுக்கு பிறகு உங்கள் வீட்டு குலதெய்வ வழிபாடு என்றுமே விட்டுப் போகக் கூடாது. அது உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியினருக்கு பாதிப்பை கொடுத்து விடும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -