ஜோதிடம் : இந்த ஆண்டு அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?

12-rasigal

வாழ்க்கை என்றாலே நன்மை, தீமை என இரண்டும் கலந்து தான் இருக்கும். இந்த இரண்டையும் வாழ்வில் எதிர்கொள்ளாத மனிதன் அநேகமாக இல்லை என்றே கூறலாம். ஜோதிட கலையும் மனிதனின் வாழ்வில் ஏற்பட போகும் நன்மை, தீமைகளை பற்றிய பலன்களை கூறுகிறது. அந்த வகையில் இந்த 2019 ஆம் ஆண்டில் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய ராசியினர் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

midhunam

புதனின் ஆதிக்கம் மிகுந்த மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு இவர்களின் ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சியாகியுள்ளதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவதால் நன்மையுண்டாகும். இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் மிதுன ராசியினர் எதிலும் சற்று கூடுதலான முயற்சி மற்றும் உழைப்பை தந்தால் மட்டுமே ஓரளாவிற்காவது நன்மையான பலன்களை பெற முடியும். ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்வதை தவிர்ப்பதால் தேவையற்ற குழப்பங்களையும், விரயத்தையும் தவிர்க்கலாம். பலருக்கும் தொடர்ந்து ஓய்வின்றி செயல்படக்கூடிய நிலை உண்டாகும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

கடகம்:

Kadagam Rasi

- Advertisement -

மனதை ஆளும் தன்மை கொண்ட கிரகமான சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கடக ராசியினர் என்பதால் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் இவர்களின் மனதில் ஏற்படும். எதிலும் நிலையற்ற தன்மை கொண்ட ஒரு குணம் கடக ராசியினரின் ஒரு பலவீனமான அம்சமாகும். இந்தாண்டு கடக ராசியினர் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது நல்லது. அதிலும் பிறருடனான உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்வதால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். தங்களின் சொந்த செயல்பாடுகள், நடவடிக்கைகளை கவனித்து அதில் உள்ள தவறுகளை திருத்தி கொள்வதன் மூலம் பல நன்மையான பலன்கள், மாறுதல்கள் ஏற்படுவதை காணலாம். பணம் விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதால் பிறருக்கு கடன் போன்றவற்றை கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினரின் மிக பெரும் பலம் அவர்களின் விடாமுயற்சி தன்மை ஆகும். ஆனால் சமயங்களில் இதுவே அவர்ககளை எளிதில் சோர்வடைய செய்யும் ஒரு பலவீனம் ஆகிவிடுகிறது. இந்த ஆண்டு கஷ்டங்களை அதிகம் சந்திக்க வேண்டிய ஒரு ஆண்டாக இருக்கிறது. நெருக்கமான உறவுகளுடன் ஏற்படும் மனக்கசப்புகளால் உங்களால் எதிலும் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். ஒரு சில காரியங்களை மிகவும் கஷ்டப்பட்டு முடிக்கும் நிலை ஏற்படலாம். இவ்வாறு பாதகமான பலன்கள் அதிகம் இருந்தாலும் தொழில், வியாபாரங்களில் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபங்களை பெறுவார்கள். பணியில் இருப்பவர்கள் பிறருடனான பேச்சுகளில் கவனத்தோடு இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kavanam iruka vendiya rasigal in Tamil. It is also called as 12 rasis in Tamil or Rasi palan jothidam in Tamil or Rasigal in Tamil or 12 rasigal in Tamil.