செல்வம், செல்வாக்கு தரும் முசல யோகம்

musala-yogam

ஒரு நபர் பிறக்கின்ற அவரது பூர்வ ஜென்ம கர்ம வினை, அவரின் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் பலன் ஆகியவை பிறக்கின்ற அந்நபரின் ஜாதகத்தில் நல்ல யோகங்களை ஏற்படுத்துகிறது. யோகங்களில் நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும் யோகங்களும், பாதகங்களை அதிகம் செய்யும் யோகங்களும் இருக்கின்றன. சில யோகங்கள் மிகவும் அபூர்வமாக ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படுவதாகவும் இருக்கின்றன. அப்படியான ஒரு யோகம் தான் “முசல யோகம்”. இந்த முசல யோகம் குறித்து இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் ஜாதகத்தில் “ராகு – கேது” கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்கள் அனைத்தும் “ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்” ஆகிய நன்கு “ஸ்திர” ராசிகளில் இடம்பெற்றிருந்தால் அந்த நபருக்கு “முசல யோகம்” உண்டாகிறது. இந்த முசல யோகம் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் ஒன்று.

ஜாதகத்தில் முசல யோகம் கொண்ட நபர்கள் தன்மான உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள். உயர்ந்த குணங்களை பெற்றிருப்பார்கள். திட்டமிட்ட வாழ்க்கையை மேற்கொள்வார்கள். சிறந்த கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக்கொண்டு, அதன் படி வாழ்வார்கள். இப்படி வாழ்வதால் அவர்களுக்கு பெரும் செல்வம் மற்றும் புகழ் உண்டாகிறது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள்.

சிறு வயதிலிருந்தே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். பல விதமான விடயங்களை கற்று பண்டிதர்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாக திறன் இவர்களிடம் இருக்கும். மிகப்பெரும் தொழில் நிறுவனங்களை உண்டாகும் திறமை, சாமர்த்தியம் போன்றவை இவர்களிடம் அதிகம் இருக்கும். வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாலும் தங்களின் லட்சிய பாதையிலிருந்து சிறிதும் வழுவமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கையின் நடுத்தர வயதுகளில் தங்களின் கடின உழைப்பால் பெரும் செல்வந்தர்களாக மாறியிருப்பார்கள். சமுதாயத்தில் உள்ள அனைவராலும் மதிக்கப்படுவார்கள். மக்கள் செல்வாக்கு இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்திலும் வெற்றியை த்தரும் ஜெய யோகத்தை பற்றி தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have details of Musala yoga in Tamil or Musala yogam payangal in Tamil. Musala yoga effects in Tamil or Musala yoga benefits in Tamil.