கீரை வடைய இப்படி செஞ்சி பாருங்க, ஹோட்டல் ஸ்டைல்ல நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்பியா சாப்பிட செமையா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

keerai vada
- Advertisement -

மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான கீரை வடையை நல்ல கிறிஸ்ப்பியா ஹோட்டல் ஸ்டைல்ல எப்படி செய்யறது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

கீரை வடை செய்வதற்கு முதலில் கடலைப்பருப்பு 100 கிராம், உளுத்தம் பருப்பு 100 கிராம் இரண்டையும் அலசி தண்ணீர் ஊற்றி தனித் தனியாக நான்கு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஒரு கட்டு கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த கீரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முருங்கைக்கீரை சேர்த்து செய்யும் பொழுது சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

இத்துடன் 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் 1 துண்டு இஞ்சி, 5 பூண்டு பல் இவற்றை இடி உரலில் சேர்த்து இடித்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வடைக்கு மாவை அரைத்துக் கொள்ளலாம். ஊற வைத்த பருப்பை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு இரண்டு பருப்பையும் ஒன்றாக கலந்து மிக்ஸி ஜாரில் முதலில் பாதி மட்டும் சேர்த்து 1 ஸ்பூன் சோம்பு, 3 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது அரைப்பட்டதும் மீதமிருக்கும் பருப்பையும் சேர்த்து இன்னும் ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பை மைய அரைக்கக் கூடாது சற்று கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். அதே சமயம் தண்ணீர் கொஞ்சம் கூட ஊற்றக் கூடாது. இதை மட்டும் கவனமாக பார்த்து அரைத்து எடுத்து மாவை ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

அடுத்து அரைத்து வைத்த மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்து இஞ்சி, பூண்டு இத்துடன் சுத்தம் செய்து வைத்த கீரையை இரண்டு கைப்பிடி மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து தயார் செய்து வைத்த மாவை ஒரு வாழை இலையில் வைத்து மெலிதாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு அந்த வடை மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் நல்ல கிற்ஸ்பியான மொரு மொரு ஹோட்டல் ஸ்டைல் கீரை வடை தயார். வடை தட்டும் போது கைகளில் லேசாக தண்ணீர் தொட்டுக் கொள்ளுங்கள் மாவு கைகளில் ஒட்டாமல் ஈசியாக வரும்.

இதையும் படிக்கலாமே: உடுப்பி ஹோட்டல் பொடி இட்லி மணப்பதற்கு இந்த ரகசியம் தான் காரணமா? அசல் உடுப்பி இட்லி பொடி ரெசிபி இதோ உங்களுக்காக!

இந்த முறையில் கீரை வடை ஒருமுறை செய்து பாருங்கள் போட்டோவில் கிடைக்கும் கீரை வடையை போலவே நல்ல மொறு மொறு என்று அதே சமயம் கிறிஸ்பியாகவும் இருக்கும். நீங்களும் ஒருமுறை இந்த வடை ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -