உடுப்பி ஹோட்டல் பொடி இட்லி மணப்பதற்கு இந்த ரகசியம் தான் காரணமா? அசல் உடுப்பி இட்லி பொடி ரெசிபி இதோ உங்களுக்காக!

podi-idly1
- Advertisement -

உடுப்பி ஹோட்டலில் இந்த பொடி இட்லி சூப்பராக இருக்கும் என்று சொல்லுவார்கள். இதே போல ஒரு சில ஹோட்டல்களில் கூட பொடி இட்லியை சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரான ருசி இருக்கும். வீட்டில் அரைக்கும் பொடியை வைத்து, பொடி இட்லி செய்தால் அவ்வளவு ருசியாக இருக்காது. அப்படி என்ன ஹோட்டலில் அரைக்கும் இட்லி பொடியில் தனி சுவை இருக்குது. உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா. வாங்க சூப்பரான இந்த உடுப்பி ஓட்டல் பொடி ரெசிபி நாமும் பார்த்து விடலாம்.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 கப் அளவு பொட்டுக்கடலையை போட்டு, வறுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே ஆறட்டும். அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மிளகாய் 10 போட்டு வறுத்து இதை தனியாக இன்னொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே கடாயில் இன்னும் கொஞ்சம் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, தோல் உரிக்காத பூண்டு பல் 10, கருவாப்பிலை 2 கொத்து, சின்ன லெமன் சைஸ் புளி, போட்டு வறுத்து இதையும் வரமிளகாயோடு கொட்டி ஆறவிடுங்கள். அடுத்து இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் 1 ஸ்பூன், துருவிய தேங்காய் 1 கப், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு தேங்காயை பொன்னிறம் வரும் வரை மொறு மொறு என வருத்து இதையும் வறுத்த வரமிளகாய், பூண்டு, கருவேப்பிலை யோடு, கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

இப்போது பொட்டுக்கடலை மட்டும் தனியாக இருக்கிறது. வறுத்த மற்ற பொருட்கள் எல்லாம் தனியாக இருக்கிறது. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மட்டும் கொட்டாதிங்க. வறுத்த மற்ற பொருட்களை எல்லாம் கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு, 1/2 ஸ்பூன் வெல்லம், சேர்த்து நன்றாக அரைத்து விடுங்கள். இறுதியாக வறுத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையை போட்டு அரைத்தால், சூப்பரான உடுப்பி ஹோட்டல் இட்லி பொடி ரெடி. இதை வைத்து பொடி இட்லியை எப்படி செய்யலாம்.

- Advertisement -

ஆறின இட்லி நமக்கு தேவை. குட்டி குட்டி இட்லி தட்டு இருந்தால், அதில் இட்லி வார்த்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பெரிய இட்லியை துண்டு துண்டாக வெட்டி கூட, பொடி இட்லி செய்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, அதன் மேலே குட்டி குட்டி இட்லிகளை போட்டு, மேலே இந்த உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் அரைத்த பொடியை தூவி, இரண்டு நிமிடம் அப்படியே சூடு செய்து அடுப்பை அணைத்து சாப்பிட்டு பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்ங்க.

இதையும் படிக்கலாமே: பிரியாணியே தோத்து போற அளவுக்கு சுவையான தக்காளி சாதத்தை குழையாம உதிரி உதிரியா வர இப்படி செஞ்சு பாருங்க. சூப்பரான அதே சமயம் ரொம்ப சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.

பின்குறிப்பு: ஒரு வாரம் வரை இந்த பொடியை பாட்டிலில் ஸ்டோர் செய்து வெளியில் வைக்கலாம். தேங்காய் சேர்த்து இருப்பதால் மீதம் இருக்கும் பொடியை ஒரு வாரம் கழித்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது பொடி இட்லி, பொடி தோசை இப்படி செய்து சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் சாதாரணமாக எண்ணெயில் குழைத்து இட்லிக்கு தொட்டு கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -