- Advertisement -
Homeதமிழ்கீரை வகைகள் | Keerai vagaigal in Tamil

கீரை வகைகள் | Keerai vagaigal in Tamil

- Advertisement -

60 கீரை வகைகள் | Keerai vagaigal athan payangal Tamil

Keerai vagaigal: “உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது தமிழர்கள் கண்டுபிடித்த சித்த வைத்திய மருத்துவ முறையின் அடிப்படை கொள்கையாகும். அன்றாடும் நாம் சாப்பிடும் உணவுகள் பல வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் கலவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் உணவு பட்டியலில் கீரைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கீரைகள் உணவாக மட்டுமில்லாமல் மனிதர்களின் சீரான உடல் நலத்திற்கு அரு மருந்தாகின்றன. அந்த வகையில் என்னென்ன கீரைகளை நாம் சாப்பிட்டால் என்னென்ன வகையான நன்மைகளை பெறலாம் என்பதைக் குறித்து இங்கு மிக சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

Keerai vagaigal in Tamil

கீரை வகைகள்

கீரை வகைகள் - keerai vagaigal கீரை பயன்கள்
தாளிக்கீரை பயன்கள் உடலில் ஏற்படுகின்ற புண், அலர்ஜி, சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற உபாதைகள், ஆண்களின் விந்தணு குறைபாடுகள் போன்றவை நீங்கும். தோல் நோய்கள் நீங்கும் சருமம் பளபளப்பு பெறும்.
வேலி பருத்தி கீரை வாதங்களால் ஏற்பட்ட வலி நீங்கும். உடலெங்கும் இருக்கும் வீக்கம் குறையும். யானைக்கால் நோயை குணமாக்கும்.
சதகுப்பை கீரை பயன்கள்ஜீரண சக்தி பெருகும். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற வயிற்றுவலி நீங்கும். குழந்தை பெற்ற பெண்களின் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறும்.
புளியக்கீரை மலேரியா நோயின் கடுமைத்தன்மையை குறைக்கும்.
ஆதொண்டை கீரை பயன்கள்தலைவலி, மூக்கடைப்பு போன்ற நோய்களை குணப்படுத்தும். செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்
சினிங்கி கீரை நீர் தொடர்பான குறைபாடுகள் தீரும். மூலச்சூடு தணியும். ஆண்மையைப் பெருக்கும்.
நில வேம்பு இலை கீரை பயன்கள்விஷக்காய்ச்சல்களை போக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். சொரி சிரங்குகள் போன்றவற்றை குணமாக்கும்.
பரட்டைக்கீரைஉடல் எடையை குறைக்கும். நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
தொய்யக்கீரை/ சுண்ணாம்பு கீரை மலச்சிக்கலைப் போக்கும். தாதுக்களை கெட்டியாகும். வயிற்றுப் புண்கள் குணமாகும்.
மணலிக் கீரை பயன்கள் - Keerai vagaigalஞாபக சக்தியை பெருக்கும். குடலில் இருக்கும் தட்டை புழுக்களை வெளியேற்றும். மூளை நரம்புகள் பலம் பெறும்.
சுக்கான் கீரைரத்தம் சுத்தமாகும். மதுப்பழக்கத்தால் வலுவிழந்த ஈரல் பலமாகும். பசியை உண்டாக்கும்.
சேம்பு கீரை/ சேப்பங்கிழங்கு கீரை பயன்கள் வெட்டுக் காயங்களை ஆற்றும். வயிற்று வலி குறையும். மலச்சிக்கல் குணமாகும்.
சோம்புக்கீரை - Keerai vagaigal பிரசவித்த பெண்களுக்கு சிறந்த பத்திய உணவு. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். புற்றுநோய் வராமல் காக்கும்.
பண்ணைக்கீரை/ மகிழி கீரை பயன்கள் பெண்களின் மாதவிடாய் உதிரப்போக்கு பிரச்சனைகளை தீர்க்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
முள்ளிக்கீரைசிறுநீரக கற்களை கரைக்கும். உடலில் ஏற்படுகின்ற வீக்கங்களை வற்றச் செய்யும். செரிமான கோளாறுகளை சரி செய்யும்.
நாயுருவி கீரை பயன்கள்தேமல், சொறி படைகள் குணமாகும். ரத்த மூல நோயை குணமாக்கும். தேள் கொட்டிய விஷம் இறங்க பயன்படும்.
சங்குப்பூ கீரைஅந்தரங்க உறுப்பு புண்களை குணமாக்கும். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற இறைப்பு நோய் நீங்கும். ஒற்றைத் தலைவலி நீங்கும்.
பொடுதலைக் கீரை பயன்கள்தலையில் ஏற்படுகின்ற பொடுகு தொல்லைகளை தீர்க்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். அக்கி புண்களை குணமாக்கும்.
நல்வேளைக் கீரை / தைவேளை கீரை - Keerai vagaigal வாதநோய்கள் குணமாகும். காது வலியை தீர்க்கும். குழந்தைகளின் மார்புச்சளி, காய்ச்சல் போன்றவை குணமாக்கும்.
தரை பசலை கீரை / பேன் கீரை பயன்கள்சிறுநீரகக்கற்கள் கரையும். கல்லீரல் நச்சுக்கள் கிருமிகள் நீங்கும். மூல நோயை குணமாக்கும்.
ஆரைக் கீரை நீர்க்கடுப்பு, சிறுநீர்தாரை குணமாகும். கை கால்களில் ஏற்படும் குடைச்சல் நீங்கும். வாய்ப் புண்கள் குணமாகும்.
காட்டுக்கடுகு கீரை/ நாய்வேளை கீரை பயன்கள்வாயுத் தொல்லைகளை போக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்கும். வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
இன்சுலின் கீரைநீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும்.
வாதநாராயண கீரை பயன்கள்ஆர்த்தரைடீஸ் பிரச்சனைகளை சரிசெய்யும். வாத நோய்களை குணமாக்கும். கை, கால் குடைச்சல் குணமாகும்.
புண்ணாக்கு கீரை புற்றுநோயை தடுக்கும். விஷக்கடி குணமாகும். கல்லீரல் பலம் பெறும். மூலநோய் தீரும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
சொடக்கு தக்காளி கீரை பயன்கள்உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தும்பைகீரை ஒவ்வாமை பிரச்சனைகளை குணமாக்கும். ஒற்றைத் தலைவலி நீங்கும். உடல் அசதி சோர்வு போன்றவை தீரும்.
குப்பைக்கீரை பயன்கள்நரம்புகள், எலும்புகள் வலுப்பெறும். கண் தொடர்பான குறைபாடுகளை சரி செய்யும். ரத்தக்கொதிப்பை சரிப்படுத்தும்.

Keerai vagaigal

Keerai vagaigal

கீரை வகைகள் - keerai vagaigal கீரை பயன்கள்
கரிசலாங்கண்ணிக் கீரை - Keerai vagaigalகல்லீரல் பிரச்சனைகளை சரி செய்யும். தலைமுடி வளர செய்யும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொந்தரவை நீக்கும்.
வெந்தயக்கீரை பயன்கள்வயிற்றில் குடல் புண்கள் ஆறும். உடல் சூடு தணியும். சொரி சிரங்கு குணமாகும்.
சக்கரவர்த்திக் கீரைமூட்டு வலியை தீர்க்கும். ரத்தசோகையை போக்கும். எலும்புகள் வலிமை பெறும். புற்று நோய்க்கு சிறந்த மருந்து.
கோவைக்கீரைகண்நோய்களை குணமாக்கும். தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும். மன அழுத்த பிரச்சனையை சரிசெய்யும்.
மூக்கிரட்டை கீரைகல்லீரல் சிறுநீரகங்களில் இருக்கின்ற நச்சுகளை வெளியேற்றும். உடலுக்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
காசினிக்கீரை - Keerai vagaigalஆண்களின் விந்தணு குறைபாட்டை சரிசெய்யும். உடலில் இருக்கின்ற கெட்ட நீரை வெளியேற்றும். பற்கள் தொடர்பான நோய்களை நீக்கும்.
புளிச்சக்கீரைபசியை தூண்டும். சரும நோய்களை குணமாக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். வாத கோளாறுகளை நீக்கும்.
கொத்தமல்லிக் கீரைநரம்புகள், எலும்புகள் தசைகள் வலுப்பெறும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். தோல் சுருக்கங்களை போக்கும்.
வல்லாரைக் கீரைஞாபக சக்தியைப் பெருக்கும். ஈறுகளை பலப்படுத்தும். இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.
சாரணை கீரைஈரல் வலிமை பெறும். முகப்பருக்களை நீக்கும். பல் மற்றும் ஈறுகள் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
முசுமுசுக்கை கீரைசுவாசம் தொடர்பான நோய்களை குணமாக்கும். ரத்தத்தை தூய்மைப்படுத்தும். இரைப்பிருமல், மூக்கு புண்களை குணமாக்கும்.
கல்யாண முருங்கை கீரைபெண்களின் கருப்பை குறைபாடுகளை தீர்க்கும். சோகை குணமாகும். சிறுநீரக நோய்களை குணமாக்கும்.
தவசிக்கீரைரத்த சுத்தி ஏற்படும். பற்கள் மற்றும் எலும்புகள் வலிமை பெறும். குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த ஊட்டச்சத்து உணவு.
துத்திக் கீரை - Keerai vagaigalமூல நோய் குணமாகும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும். பல் ஈறுகள் வலிமை பெறும்.
குப்பைமேனி கீரைபூச்சிகளின் விஷக்கடி குணமாகும். மார்பு சளியை வெளியேற்றும். முகப்பருக்களை போக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அகத்திக்கீரைகண் பார்வையைத் தெளிவாக்கும். ரத்தசோகையை குணமாக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.
பொன்னாங்கண்ணிக் கீரைகண் தொடர்பான அனைத்து குறைபாடுகளை சரிசெய்யும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். அதீத உடல் எடையை குறைக்கும்.
முடக்கத்தான் கீரைஉடலில் இடுப்பு, மூட்டு வலிகளை போக்கும். வாயுத் தொல்லைகள் நீக்கும். மூல நோய், கரப்பான், கிரந்தி போன்றவற்றை குணமாக்கும்.
பாலக்கீரைநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ரத்தக்குழாய் அடைப்பை சீர்செய்யும். காது இரைச்சல் குணமாகும்.
அம்மான் பச்சரிசிக் கீரைதோலில் உருவாகும் மருக்களை நீக்கும். தாது பலம் உண்டாகும். தாய்ப்பால் சுரக்க செய்யும்.
பருப்புக்கீரைசிறுநீரக கற்களை தடுக்கும். கல்லீரல் வலுப்படும். மலச்சிக்கலை போக்கும். நெஞ்செரிச்சல் குணமாகும்.
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரைகண் பார்வை கூர்மை அடையும். உடல் சூடு தணியும். காசநோய்க்கு சிறந்த இயற்கை மருந்து.
பச்சைக் கொடி பசலைக் கீரை (Keerai vagaigal)இதயத்திற்கு நன்மை தரும். செரிமான கோளாறுகளை சரி செய்யும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
முளைக்கீரைகாய்ச்சல் நோய்களை போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும். வயிற்று நோய்கள் குணமாகும்.
முருங்கைக்கீரை -Keerai vagaigal payangalஆண், பெண் மலட்டுத் தன்மையை போக்கும். எலும்புகள், பற்கள் வலுப்பெறும். ரத்தசோகை குணமாகும்.
லட்சக்கொட்டை கீரை/ நஞ்சு கொண்டான் கீரை (Keerai vagaigal)உடலில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றும்.
முள்ளங்கிக்கீரைஇதயத்தை பலப்படுத்தும். சிறுநீரக கற்கள் கரையும். கண் பார்வை தெளிவு பெறும்.
சிகப்புத்தண்டு கொடி பசலைக்கீரைவீக்கம், கட்டிகளை ஆற்றும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். தலைவலி நீங்கும். ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்.
புதினாக்கீரை (Keerai vagaigal)மூட்டு வலியை போக்கும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும். குடற்புண்களை ஆற்றும் மஞ்சள் காமாலையை குணமாக்கும்.
வெள்ளைப் பொன்னாங்கண்ணிகண் தொடர்பான குறைபாடுகளை சரிசெய்யும். வாய்ப்புண்களை ஆற்றும். அதீத உடல் எடையை குறைக்கும்.
கானா வாழைக் கீரைகபம் தொடர்பான குறைபாடுகளை சரிசெய்யும். உடல் இழந்த ரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ஏற்படுகின்ற புண்களை குணமாக்கும்.
மணத்தக்காளிக் கீரை (Keerai vagaigal)மலட்டுத் தன்மை கொண்ட பெண்களை கருவுறச் செய்யும். வயிற்றுப் புண்களை குணமாக்கும். சிறுநீரகம் வலுப்பெறும்.
பசலைக்கீரைஉடலில் சேரும் கொழுப்பை கரைக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு வியாதிகளை குணமாக்கும்.

கீரை வகைகள் படங்களுடன் பெயர்கள் – Keerai vagaigal images in Tamil

keerai vagaigal in Tamil

கீரை என்பது இயற்க்கை அன்னை நமக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் என்றே கூறலாம். அதில் உள்ள சத்துக்கள் அளப்பரியது. 10 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் 50 கிராம் அளவாவது கீரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு கீரையும் வெவ்வேறு நோய்களுக்கு அரும்மருந்தாக இருக்கிறது. ஆகையால் ஒரே கீரையை உண்ணுவதற்கு பதிலாக வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கீரையை உண்ணுவதன் மூலம் நாம் பல சத்துக்களை சரிவர ஒருங்கே பெற முடியும்.

தற்காலத்தில் மக்கள் அதிக அளவில் அவஸ்தைப்படக்கூடிய ஒரு நோயாக மாறி உள்ளது சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால். இந்த இரண்டிற்கும் அருமருந்தாக விளங்குகிறது சில கீரை வகைகள் (Keerai vagaigal). தினமும் நாம் சாப்பிடும் அரசி உணவை சிறிதளவு குறைத்து அதை ஈடும் செய்யும் வகையில் அதே அளவில் நாம் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலின் பல சிக்கல்கள் தீரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சற்று முன்