தலை வாரும் பொழுது உங்கள் தலை முடி கொத்துக் கொத்தாக கொட்டுகிறது என்று கவலையாக இருக்கிறதா? முதலில் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கவலைகள் அனைத்தும் மறைந்துவிடும்

hair
- Advertisement -

முடி கொட்டும் பிரச்சனை என்பது இப்பொழுது பெண்களுக்கு பெரும் கலையாக மாறிவிட்டது. இந்த முடி கொட்டும் பிரச்னையை சரி செய்ய என்ன தான் செய்வது, எந்த டாக்டரிடம் செல்வது, எந்த மருந்து சாப்பிடுவது, எந்த எண்ணெய் தடவுவது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. ஒரு பிரச்சனைக்காக மருத்துவரிடம் சென்றால் பல பிரச்சனைகள் அதனுடன் சேர்ந்து கொள்கிறது. ஆகவே என்ன செய்ய வேண்டும் என்ற கவலை பலருக்கும் இருக்கிறது. ஏனென்றால் ஒருவருக்கு தலைமுடி என்பது தங்கள் அழகைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவரின் அழகையும் மேம்படுத்தும் தலைமுடியை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும். எனவே முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த இலைகளை வைத்து ஒரு ஹேர் பேக் செய்து வாரம் ஒரு முறை தடவி குளித்தால் போதும். உங்கள் தலைமுடக வலுவாகி, முடி கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும். வாருங்கள் இந்த ஹேர் பேக்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, மருதாணி இலை – ஒரு கைப்பிடி, செம்பருத்தி இலை – ஒரு கைப்பிடி, செம்பருத்திப் பூ – 6, வேப்ப இலை – ஒரு கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் – 5, தயிர் – கால் கப், திரிபலா பவுடர் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மருதாணி இலை, வேப்ப இலை, துளசி இலை மற்றும் செம்பருத்தி இலை அனைத்தையும் தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு, மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் காயவைத்த அல்லது ஃபிரஷ்ஷான செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஆறு பெரிய ஆறு நெல்லிக்காய்களை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள கொட்டைகளை மட்டும் நீக்கிவிட்டு, இவற்றை பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை அரைத்து விட்ட பிறகு இதனுடன் கால் கப் தயிர் சேர்த்து மறுபடியும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா பவுடர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தலைமுடியை இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஹேர் பேக்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தலைமுடியின் வேர்க்கால்களில் படுமாறு தடவி விட வேண்டும்.

பிறகு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து அதன் பிறகு தலை முடியை இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை இதனை செய்து வந்தால் உங்கள் முடி கொட்டும் பிரச்சனை விரைவாக நின்றுவிடும். உங்கள் முடி வளர்ச்சியும் அதிகரித்து விடும்.

- Advertisement -