- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகேட்டதை கொடுக்கும் சுப்பிரமணியர் வழிபாடு

கேட்டதை கொடுக்கும் சுப்பிரமணியர் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் வரும். அந்த நட்சத்திரத்திற்கு ஏற்றார் போல் அந்த நட்சத்திரத்திற்குரிய தெய்வத்தை நம்ம வழிபாடு செய்யும் பொழுது நமக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாக திகழக்கூடியது கார்த்திகை நட்சத்திரம். இதற்கு முக்கியமான காரணம் முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் என்பதால் கார்த்திகை பெண்களுக்குரிய நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நாம் வேண்டிய வரத்தை முருகப்பெருமான் தருவார் என்பதுதான். அப்படிப்பட்ட கிருத்திகை நட்சத்திர நாளன்று வேண்டிய வரம் கிடைப்பதற்கு முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கேட்டதை கொடுக்கும் சுப்பிரமணியர் வழிபாடு

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் என்பது வரும் அந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு சிலர் பரணி நட்சத்திரத்தில் இருந்தே விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். விரதமே இருக்க முடியாமல் முருக பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி யாராக இருந்தாலும் இந்த ஐப்பசி கார்த்திகையில் கூற வேண்டிய முருகப்பெருமானின் மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரம் என்பது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி 2:30 மணிக்கு மேல் ஆரம்பித்து அக்டோபர் மாதம் 20ஆம் தேதி 1:30 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்திற்குள் முருகப்பெருமானை மனதார நினைத்து நாம் இந்த மந்திரத்தை கூறும்பொழுது முருகப்பெருமான் மனமகிழ்ந்து நாம் வேண்டிய வரத்தை நமக்கு அருள்வார் என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு ஆறு இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். இயன்றவர்கள் ஆறு நெய் தீபத்தை ஏற்றி வைத்தும் வழிபாடு செய்யலாம். ஒரு சிலர் வெற்றிலை தீபம் ஏற்றும் வழக்கமும் வைத்திருப்பார்கள். அவரவர்களின் வழக்கத்திற்கு ஏற்றார் போல் முருகப்பெருமானை கார்த்திகை நட்சத்திர நாளில் வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு கீழ் வரும் இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி உச்சரிப்பதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. வேலை நிமிர்த்தமாக நம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைப்பட்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே திருமணம் கைகூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நல ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாயால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். முக்கியமாக கடன் பிரச்சனை முற்றிலும் தீரும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பலன்களை தரக்கூடிய அற்புதமான இந்த மந்திரத்தை ஆறு முறை கண்டிப்பான முறையில் கூற வேண்டும். நிறுத்தி நிதானத்துடன் முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும்.

மந்திரம்

ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

இதையும் படிக்கலாமே:தீராத கஷ்டத்தை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் இருக்கும் நேரத்தில் முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை ஆறு முறை முழுமனதோடு கூறுபவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்