கிச்சனை க்ளீன் செய்யும் கெட்சப்! இதைப் போய் சுத்தம் செய்ய எப்படி பயன்படுத்துவது ஒன்றும் புரியவில்லையே?

cleaning
- Advertisement -

சாப்பிடுவதற்காக பயன்படுத்தக்கூடிய பொருள்தான் கெட்சப். இதை வைத்து சமையல் அறையை எப்படி சுத்தம் செய்வது என்ற சந்தேகம் எல்லோருக்கும் நிச்சயம் இருக்கும். சமையலறையை சுத்தம் செய்ய இந்த டொமேட்டோ கெட்சபை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய ஒரு புத்தம்புதிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் கை வலிக்காமல் இந்த குறிப்பு உங்களுக்கு சுத்தத்தை தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் குறிப்புக்குள் செல்வோம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன், டொமேட்டோ கெட்சப் 1 டேபிள் ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஷில் போட்டு உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் டேப் மேலே நன்றாக அப்ளை செய்து விடுங்கள். லேசாக கறை படிந்திருந்தால் 10 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்கிரப்பரை வைத்து டேப் பை நன்றாக தேய்த்து, டேப்பை கழுவி விட்டால் பளிச்சு பளிச்சென மாறிவிடும். இதுவே ரொம்பவும் கறை இருந்தால் 1/2 மணி நேரம் கூட ஊற வைக்கலாம். தவறு கிடையாது.

- Advertisement -

இதையே உங்கள் வீட்டு சிங்கை சுத்தம் செய்யவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிங்கிள் படிந்திருக்கும் உப்பு கறை வெள்ளையான திட்டுக்கள், அனைத்தும் நீங்க இந்த ஷாம்பு மற்றும் டொமேட்டோ கெட்சப் மட்டுமே போதும். எவர்சில்வரில் இருக்கக்கூடிய சிங்குக்கும் இதை பயன்படுத்தலாம். கல்லில் போட்டு வைத்திருக்கும் சிங்குக்கும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஹோட்டலில் நாம் ஏதாவது சாப்பிடக்கூடிய பொருள் வாங்கும் போது 1 ரூபாய் கெச்சப் கூட நமக்கு கிடைக்கும். நிறைய பேர் வீடுகளில் அதை பயன்படுத்தாமல் தூக்கிப் போட்டு விடுவார்கள். அதைக்கூட நீங்கள் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டு டேப் மற்றும் சிங்கிள் கொஞ்சம் உப்பு கறை இருந்தால் அதை இந்த முறையில், ஒருமுறை சுத்தம் செய்யும்போதே நீங்கிவிடும். நீண்ட நாட்களாக படிந்த உப்புக்கரை என்றால் வாரத்தில் 2 நாட்கள் இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க. ஒரு மாதத்திற்குள் உங்கள் வீட்டில் இருக்கும் மிகப் பழைய எவர்சில்வர் டேப் சிங்க் அனைத்துமே கூடிய சீக்கிரத்தில் புதுசு போல மாறிவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக சமையலறையில் இருக்கும் ஸ்டவ், கப்போர்ட், சமையல் மேடை இவைகளை சுத்தம் செய்ய மிக மிக எளிமையான ஒரு குறிப்பு. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதி எலுமிச்சம்பழம் தோலுடன் போட்டுக் கொள்ளுங்கள். பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் 1 டம்ளர், பேக்கிங் சோடா 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸி ஜாரை நன்றாக ஓட விடுங்கள். இதை கிளீனிங் லிக்விடை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த பிளாஸ்டிக் வாட்டர் கேன் மேலே மூடி போட்டு, மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளையும் போட்டுக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான கிளீனிங் ஸ்ப்ரே தயார்.

உங்களுடைய சமையலறையில் எண்ணெய் பிசுக்கு அழுக்கு படிந்த இடத்தில் இந்த ஸ்ப்ரேவை அடித்துவிட்டு வெறும் துணியால் துடைத்தாலே பிசுபிசுப்பு தன்மை ஒரு நொடிப் பொழுதில் நீங்கிவிடும். ஸ்டவ்வுக்கு மேலே, சமையலறை மேடை இதையெல்லாம் சுத்தம் செய்ய இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும். எப்போது எந்த இடத்தை சுத்தம் செய்தாலும் லிக்விடை ஊற்றி துணியை போட்டு துடைத்து எடுத்த பின்பு, உடனடியாக காய்ந்த துணியை போட்டு அந்த இடத்தை துடைத்தால் தான் நீங்கள் செய்த சுத்தம் முழுமை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த லிக்விட் வாசத்திற்கு சமையலறைக்கு எறும்பு, கொசு, சின்ன சின்ன கரப்பான் பூச்சி தொல்லைகள் நிச்சயம் இருக்காது. சமைத்து முடித்தவுடன் இந்த ஸ்ப்ரேவை தினம் தோறும் பயன்படுத்தி சமையல் அறைக்கு உள்ளே இருக்கும் பொருட்களை சுத்தம் செய்து விட்டால் சமையலறையை, தனியாக சுத்தம் செய்யம் வேண்டும் என்ற பெரிய வேலை நமக்கு மிச்சமாகும். சமையலறை அறை அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் கண்ணாடி பாட்டில், சில்வர் டப்பா, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மேலே கூட இந்த லிக்விடை ஊற்றி துடைத்து வைத்தால் அந்த பாத்திரங்கள் எப்போதும் பளிச்சிட இருக்கும்.

படிப்பதற்கு தான் பெரிய குறிப்பு போல தெரியும். லிக்விடை ரெடி பண்ணி வச்சிட்டீங்கன்னா தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 10 நிமிடத்தில் கிச்சன் கிளீன் ஆகும். ஒரு வாரம் வரை இந்த லிக்விட் கெட்டுப் போகாது. உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டு சமையல் அறை எப்போதும் பளிச் பளிச்சுன்னு இருக்கும்.

- Advertisement -