சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் தெரியும்மா?

annapurani thaniyam
- Advertisement -

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பூஜை அறைக்கு நிகராக கருதப்படுகிறது. ஒரு வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்றால் சமையலறையில் அன்னபூரணி தாயார் வாசம் செய்வார் என்பது ஐதீகம். வீட்டில் முதலில் வறுமை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மற்றவற்றை பற்றி சிந்திக்க முடியும். அதுமட்டுமின்றி சமையலறையை நாம் சுத்தமாக வைத்திருக்கும் போது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமும் கிடைக்கும். இப்போது அதே சமையலறையில் நாம் செய்யும் சில மாற்றங்களால் நவகிரகங்களின் அனுகிரகமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது பற்றியதொரு தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிரகங்களின் தொல்லையிலிருந்து விடுபட:
முதலில் சமையலறையில் சமைக்கும் போது நாம் நல்ல மனநிலையில் சமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் சமைக்கும் போது நம் உள்ளத்தின் உணர்வுகள் கைகள் வழியாக நாம் சமைக்கும் உணவில் சென்றடைவதாக சொல்லப்படுகிறது. நாம் சமைக்கும் அந்த உணவை உண்டு தான் நம் குடும்பம் வாழ்கிறார்கள். ஆகையால் சமைக்கும் போது யாரையும் குறை கூறிக் கொண்டும் திட்டிக் கொண்டு மன வருத்தத்துடனும் சமைக்க கூடாது என்று சாஸ்திரங்கள் அணித்தரமாக சொல்கிறது.

- Advertisement -

சமைக்கும்போது சந்தோஷமாகவும் நம் குடும்பத்தினர் நல்லபடியாக உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் சமைத்தாலே பெரும்பாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நோய் நொடி இன்றி இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி இல்லாமல் நீங்கள் பிறரை சபித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் சமைக்கும் போது அதனுடைய எண்ண அலைகளானது நம் சமைக்கும் சமையலில் சேர்ந்து அது நம் குழந்தைகளையும் நம் குடும்பத்தையும் பெருமளவு பாதிக்கும்.

அதே போல் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவு சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்து எடுத்து வைத்து விட வேண்டும். சமையல் அறையில் கெட்ட வாடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் சரியாக செய்து வரும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இந்த இரண்டு காரியங்களை சரியாக செய்வதுடன் கிரகங்களின் தோஷங்களில் இருந்து தப்பிக்க நாம் செய்யும் சமையலில் அந்தந்த நாளில் அந்தந்த கிரகத்திற்குரிய பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது மேலும் சிறப்பை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய நாள் அந்த நாளில் கோதுமையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். திங்கட்கிழமை சந்திர பகவானுக்குரிய நாள் பெரும்பாலும் நாம் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வதே சந்திர பகவான் அனுகிரகத்தை கொடுக்கும். செவ்வாய்க்கிழமையில் கட்டாயமாக துவரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடன் அடைந்து செல்வ வளம் பெருக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே போல் புதன்கிழமைகளில் ஏதேனும் ஒரு பயிறு குறிப்பாக பச்சை பயிறு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலையை செய்ய வேண்டும் குரு பகவானுக்குரிய பொருளாக இது பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரியது அவருக்குரிய பொருளான கற்கண்டு சாதம் அல்லது கற்கண்டு பொங்கல் தயிர் சாதம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சனிக்கிழமை சனி கிரகத்துடைய அந்த நாளில் எள்ளை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்காலமே: நிலைவாசல் கதவில் யார் கண்ணுக்கும் தெரியாமல் இதை மட்டும் எழுதி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.

சமையலறையில் நாம் செய்யும் ஒரு சில மாற்றங்களுடன் சமைக்கும் உணவில் செய்யும் இந்த மாற்றமானது நம் குடும்பத்திற்காக கிரகங்களின் ஆசீர்வாதங்கள் முழுவதுமாக கிடைத்து கிரகங்களினால் ஏற்படும் பல்வேறு தொல்லையிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்தப் பதிவில் உள்ள தகவல்களில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -