அட இந்த விஷயம் தெரியம்மா தான் நாள் முழுக்க கிச்சன்ல இருந்தோமா, என்று நினைக்கும் வகையில், இப்படியெல்லாம் கூட ஐடியா இருக்கா என்று யோசிக்கும் படியான சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

வாழ்க்கையில் நாம் எப்போதும் பெரிய பெரிய விஷயங்களை செய்வதற்கு முதலில் சின்ன சின்ன விஷயங்களை தெரிந்து அதிலிருந்து தான் மேலே செல்ல வேண்டும். இது வாழ்க்கைக்கான பாடம் மட்டுமல்ல, வீட்டில் ஒவ்வொரு விஷயத்திலும் கூட இந்த தத்துவம் நமக்கு உபயோகமாக தான். இந்த வீட்டு குறிப்புகளும் அப்படித்தான் நமக்கு சின்ன சின்ன விஷயமாக தெரியும் இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நம் வேலைகளை சுலபமாக முடிப்பதுடன், பணத்தை மிச்சப்படுத்துவதுடன், டென்ஷன் குறைந்து அடுப்பறையில் செலவிடும் நேரத்தை குறைத்து கொண்டு நம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உதவியாக இருக்கும். அந்த வகையில் இதிலிருக்கும் குறிப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் அது என்னென்னவென்று இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

பூண்டு உரிக்க இதை விட ஒரு சூப்பு டிப்ஸ் நம்ம கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். நீங்க உரிக்க வேண்டிய பூண்டு எல்லாம் ஒரு துணியில் போட்டு மூட்டை மாதிரி கட்டி எடுத்து கொள்ளுங்கள். நாம் காய் சீவும் சீவலில் இந்த பூண்டு மூட்டையை லேசா தேய்தால் போதும் உள்ள இருக்கும் பூண்டு எல்லாம் தோல் உரித்து வந்து விடும். இந்த முறையில நீங்க பண்ணி பாருங்க எவ்வளவு பூண்டு இருந்தாலும் இனி அசால்டா உரிச்சி எடுத்துடலாம்.

- Advertisement -

இந்த டீ வடிகட்டியை சுத்தம் செய்வது கொஞ்சம் சிரமமான காரியமாகத்தான் இருக்கும். அதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த பிறகு அதில் கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் வாஷிங் லிக்விடியும் சேர்த்து கொதித்த பிறகு நீங்கள் வைத்திருக்கும் வடிகட்டி சில்வர் என்றால் அதில் அப்படியே போட்டு விடுங்கள். இந்த டீ வடிகட்டியை போல காய், கீரை நறுக்கும் கருவி, காய் சீவும் சீவல் போன்றவையை கூட இப்படி சுத்தம் செய்யலாம் . ஒரு வேலை பிளாஸ்டிக்கில் வைத்திருந்தால், தண்ணீர் கொஞ்சம் ஆறியதும் அதில் ஒரு பத்து நிமிடம் போட்டு எடுத்த பிறகு பிரஷ் வைத்து தேய்த்துப் பாருங்கள். டீ வடிகட்டி நீங்கள் புதிதாக வாங்கியது போலவே இருக்கும் இப்படி செய்வதன் மூலம் அந்த இடுக்குகளில் சேர்ந்து இருக்கும் அழுக்கும் சுத்தமாக நீங்கி விடும்.

வீட்டில் மளிகை பொருட்களை கொட்டி வைக்கும் போது பருப்பு வகைகளில் சீக்கிரமே மாவு போல உதிர்ந்து பூச்சிகள் வைக்கும் இப்படி ஆகாமல் இருக்க பருப்புகளை வறுத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம் ஆனால் எல்லோரும் அப்படி செய்ய முடியாது அல்லவா பூண்டு உரிக்கும் போது பூண்டுகளை எடுத்துவிட்டு பூண்டின் காம்பு இருக்கும் அதை இந்த பருப்பில் போட்டு வைத்து விட்டால், எத்தனை நாட்கள் ஆனாலும் பருப்பு கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

வீட்டில் உங்களுக்கு உடனடியாக ஐஸ் பேக் வேண்டும் என்றால் கடைகளில் இனி அதை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. சிறிய குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயப்பர் இருந்தால் அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள் போதும். உங்களுக்கு ஐஸ் பேக் கிடைத்து விடும்.

அதே போல் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் அதிகமாக சேர்ந்து விட்டால் நீங்கள் அதற்காக ஆஃ செய்து அதன் பிறகு சுத்தம் செய்தாலும் கூட வீடு முழுவதும் தண்ணீராகி சுத்தம் செய்வதற்குள் ஒரு வழி ஆகி விடுவோம். இனி அந்த கவலை இல்லை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொஞ்சம் கல்லுப்பு, தூள் உப்பு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சேர்த்த பிறகு அதில் நியூஸ் பேப்பர்களை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி போட்டு விடுங்கள். இந்த பாக்ஸை திறந்து அப்படியே ஃப்ரீசர் வைத்து விட்டால் ஐஸ்கட்டிகள் எல்லாம் நொடியில் கரைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த நெயில் பாலிஷ் வைத்து இதையெல்லாம் செய்யலாம்னு தெரிஞ்சிச்சு இருந்தா எவ்ளோ காசு மிச்ச படுத்தி இருக்கலாம். இப்ப மட்டும் என்னங்க இதை தெரிஞ்சிக்கிட்டு இனி மிச்ச படுத்த வேண்டியது தானே.

இந்த  வீட்டில் வெங்காயம் பூண்டு போன்றவை வைத்தால் சீக்கிரமே ஈரமாகி அழுகி போய் விடும்.அல்லது ஒரு வித வாடை வீசும். அதற்கு நீங்கள் வெங்காயம், பூண்டு இவை எல்லாம் கொட்டி வைக்கும்குடையின் அடியில் நியூஸ் பேப்பர் போட்ட பிறகு, இதை கொட்டி வைத்தால் சீக்கிரம் ஈரமும் வராது, வீட்டில் வாடையும் வராது. இந்த குறிப்புகள் அனைத்தும் வீடு வேலையை பாதியாக குறித்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை, நீங்களும் உங்கள் வீட்டில் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

- Advertisement -