வீட்டின் சமையலறையில் தொல்லை கொடுக்கும் குட்டி குட்டி கொசுக்களையும் ஈக்களையும் விரட்ட அட்டகாசமான 6 குறிப்புகள்

fly
- Advertisement -

வீட்டின் மற்ற இடங்களைவிட சமையல் அறை எப்போதும் கொஞ்சம் ஈரமாக இருக்கும். ஏனென்றால் வேலைகள் அந்த இடத்தில் தான் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சமையலறையில் இருக்கும் காய்கறி கழிவுகளின் மீதோ அல்லது குப்பைகளின் மீதோ சிறுசிறு கொசுக்களும், ஈக்களும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த பூச்சிகளின் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. இவற்றை எளிதில் வீட்டிலிருந்து விரட்ட முடிவதில்லை. இவை மிகவும் குட்டியாக இருப்பதால் ஈசியாக வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. ஆனால் இவை உடம்பிற்கு கெடுதல் விளைவிப்பதால் இவற்றை அகற்ற இந்த ஆறு எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். வாருங்கள் அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

mosquito1

குறிப்பு: 1
நாம் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தின் வாசனைக்கு இந்த பூச்சிகளை விரட்ட முடியும். 2, 3 கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து அவற்றை எரித்து விடுவதன் மூலம் அந்த வாசனைக்கு உடனே இவற்றை வீட்டில் இருந்து அகற்ற முடியும். அதிக அளவு பூச்சித்தொல்லை இருந்தால் இந்த முறையை உடனே செய்து விடலாம். சிறிதளவு கற்பூரத்தை தூளாக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து பூச்சிகள் வரும் இடங்களில் வைத்து விட்டால் அந்த வாசனைக்கு பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
யூகலிப்டஸ் ஆயில், லெமன் க்ராஸ், லாவண்டர் மெண்ட் போன்ற எண்ணெய்களை வீட்டின் மூலைகளில் லேசாக தெளித்து வைத்தால் அந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலம் புகைப்பதால் பொருட்களையும் உயிர்களையும் வீட்டிலிருந்து விரட்ட முடியும்.

karpooram

குறிப்பு: 3
ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் சிறிதளவு தண்ணீரை ஊற்றிக் கொண்டு அதில் ஏதேனும் பழுத்த பழத்தை வாழைப்பழம், ஆர்ஞ்சு, அன்னாசி இவற்றில் ஏதேனும் ஒன்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அவற்றை பாடலில் இருக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு பேப்பரை எடுத்து மருதாணி கோன் போன்று செய்து கொண்டு, அந்த கோனின் அடிப்பகுதியில் சிறிய துளை இருக்குமாறு செய்ய வேண்டும். பின்னர் அதனை கண்ணாடி பாட்டிலின் வாய்ப்பகுதியில் நுழைத்து வைக்க வேண்டும். பழத்தின் வாசனைக்கு ஒட்டுமொத்தமாக உள்ளே செல்லும் கொசுக்கள் அனைத்தும் சிறிய ஓட்டையின் வழியே வெளியே வர முடியாமல் தண்ணீரிலேயே இறந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு: 4
ஆப்பிள் சீட்டர் வினிகரை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி வைத்து, சமையல் அறையின் மூலைகளில் வைத்துவிட்டால் அந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலம் கொசுக்கள் மற்றும் ஈக்கள் அங்கு வராமல் தவிர்க்க முடியும்.

apple-ceder-vinigar

குறிப்பு: 5
அவ்வாறு சமையலுக்கு பயன்படுத்தும் லவங்கத்தின் வாசனைக்கும் இவ்வாறான பூச்சிகள் சிறிது தூரத்திற்கு தள்ளி தான் இருக்கும். எனவே ஆப்பிள், தக்காளி போன்ற பழங்களில் இந்த லவங்கத்தை சொருகி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சிகள் அருகில் வருவதை தவிர்க்க முடியும்.

karunthulasi2

குறிப்பு: 6
துளசி, கற்பூரவல்லி போன்ற மருத்துவ குணமிக்க செடிகளை வீட்டை சுற்றி வளர்ப்பதன் மூலம் இவ்வாறான பூச்சிகள் வீட்டினை அண்டாமல் பாதுகாக்க முடியும்.

- Advertisement -