சமையலறை மேடை, டைல்ஸ் இவைகளை ஒரு முறை இந்த லிக்விடை வைத்து துடைத்து பாருங்களேன். இப்போதுதான் டயல்ஸை புதுசாக ஒட்டியது போல, டக்குனு பளபளப்பா மாறிடும்.

shink
- Advertisement -

சமையல் அறையை மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ முழுசாக டீப் கிளீனிங் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் டயல்ஸ், சமையல் மேடையில் எல்லாம் வெள்ளை திட்டுக்கள் நிரந்தரமாக படிந்து விடும். பிறகு பார்ப்பதற்கு சமையலறை அழகாக இருக்காது. சமையலறை 24 மணி நேரமும், வருடம் முழுவதும் பளிச் பளிச்சென அழகாக இருக்க மிக மிக எளிமையான பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி மாதம் ஒருமுறை சமையலறையை சுத்தம் செய்தால் வெள்ளை திட்டுக்கள் இல்லாமல் பார்ப்பதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். வாங்க டிப்ஸை பார்க்கலாம்.

சமையலறை மேடை, டைல்ஸ் சுத்தம் செய்யும் முறை:
பாத்ரூம் சுத்தம் செய்யும் ரெட் கலர் ஹேர் பிக், பல் தேய்க்கும் பேஸ்ட், வினிகர், இந்த மூன்று பொருட்கள் மட்டும் தான் நமக்கு தேவை. பாத்ரூம் தேய்க்கும் லிக்விடை சமையலறைக்கு பயன்படுத்துவதா, என்று யோசிக்காதீங்க. பாத்ரூமில் ஒட்டி இருப்பதும் டயல்ஸ் தான். சமையலறையில் ஒட்டி இருப்பதும் டயல்ஸ் தான். ஆகவே டயல்ஸ் சுத்தம் செய்யக்கூடிய இந்த ஹேர் பிக்கை தாராளமாக பயன்படுத்தலாம்.

- Advertisement -

சமையலறை சுத்தம் செய்ய தனியாக ஒரு ரெட் ஹேப்பி வாங்கிக்கோங்க. உங்களுடைய கைக்கு அலர்ஜி ஏற்படும் என்றால் இந்த குறிப்பை பின்பற்றும் போது கையில் ஒரு கிளவுஸ் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

ஒரு அகலமான பாத்திரத்தில் ரெட் ஹேர் பிக் 1/4 கப், வினிகர் 1/4 கப், பேஸ்ட் 2 ஸ்பூன், போட்டு நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஒரு லிக்விட் தயார். இதில் தண்ணீர் ஊற்ற வேண்டாம். இந்த ஜெல்லை அப்படியே ஒரு ஸ்பாஞ்ச் நாரில் தொட்டு சமையல் மேடை, டைல்ஸ் எல்லா இடங்களிலும் பூசி விடுங்கள். சிங்கிலும் பூசலாம். எல்லா இடங்களிலும் தடவிய பின்பு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு லேசாக ஸ்பாஞ்ச் நாரை வைத்து தேய்த்து விட்டு, பிறகு ஒரு ஈர துணியை போட்டு நன்றாக துடைத்துவிட்டு, பிறகு காய்ந்த துணியை போட்டு துடைத்து எடுத்தால் உங்களுடைய டயல்ஸ், மற்றும் சமையல் மேடை எல்லாம் நிமிடத்தில் பளபளப்பாக மாறிவிடும்.

இதே லிக்விடை பயன்படுத்தி உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் டைல்ஸ் ஒட்டி இருந்தாலும் அதை சுத்தம் செய்யலாம். சிலபேர் நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் கூட டைல்ஸ் ஒட்டி இருப்பார்கள். சில பேர் இப்போதெல்லாம் வீட்டிற்கு உள்ளேயே சுண்ணாம்பு அடிக்கும் வேலை மிச்சமாக வேண்டும் என்பதற்காக டைல்ஸ் ஒட்டி வைத்திருக்கிறார்கள். எந்த இடத்தில் டைல்ஸ் இருந்தாலும் அது மங்கிப் போயிருந்தால், உப்புக்காற்று பட்டு வெள்ளை படிந்து இருந்தால் அதை உடனடியாக இப்படி சுத்தம் செய்து விடுங்கள். வேலை முடிந்தது. சுலபமாக கை நோகாமல் எல்லா வெள்ளை திட்டுக்களையும் துடைத்து எடுத்து விடலாம்.

- Advertisement -

இதே லிக்விடை ஊற்றி அழுக்கு படிந்த வாஷ்பேஷன், டாய்லட்டை கூட சுத்தம் பண்ண முடியும். ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன். சுலபமாகத்தான் இருக்கும். லேசாக உப்பு கறை படிந்திருந்தால் ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றும் போதே அது அனைத்து முழுமையாக நீங்கிவிடும்.

வருட கணக்கில் சுத்தம் செய்யாமல் விட்டிருந்தால் மாதம் ஒரு முறை இந்த குறிப்பை பின்பற்றி டயல்ஸை துடைத்துக்கொண்டே வாருங்கள். மூன்று மாதத்தில் வெள்ளை திட்டுக்கள் எல்லாம் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: முருகன் இட்லி கடை சாம்பாரின் ரகசிய குறிப்பு இதுதான். ஒரு முறை இட்லிக்கு இப்படி சாம்பார் வைத்து பாருங்களேன். பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஹோட்டலுக்கு போகவே மாட்டாங்க.

வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கெட்டவாடை வீசக்கூடாது என்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறை 15 நாட்களுக்கு ஒரு முறை உங்களுக்கு தெரிந்த முறையில் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருங்கள். இல்லத்தரசிகளுக்கு நிச்சயமாக மன நிறைவும் கிடைக்கும் அதே சமயம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -