முருகன் இட்லி கடை சாம்பாரின் ரகசிய குறிப்பு இதுதான். ஒரு முறை இட்லிக்கு இப்படி சாம்பார் வைத்து பாருங்களேன். பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஹோட்டலுக்கு போகவே மாட்டாங்க.

sambar
- Advertisement -

சரவணபவன் சாம்பார், முருகன் இட்லி கடை சாம்பார் இப்படி பிரபல்யமாக இருக்கும் கடைகளில் எல்லாம் சாம்பாருக்கு என்று தனி இடம் உண்டு. அதேபோல ஓட்டல் சுவையில் நம்முடைய வீட்டில் சாம்பார் வைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். நம் வீட்டில் வைக்கும் சாம்பார் என்னதான் ருசியாக இருந்தாலும், சுடச்சுட இட்லி சாம்பார் என்றால் அது ஹோட்டலில் தான் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படி ஒரு பிரபல்யமான கடையாக சொல்லப்படும் முருகன் இட்லி கடை சாம்பார் ரெசிபியை தான் இன்று நாமும் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி ஒரு முறை சாம்பார் வைத்து சுட சுட இட்லி மேலே வார்த்து சாப்பிட்டு பாருங்கள். ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நீங்க வெச்ச சாம்பார், ஹோட்டல் சாம்பார் போல மனம் மணக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

பொடி அரைக்கும் முறை

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து விட்டு அதில் சீரகம் 1 ஸ்பூன், வர மல்லி 2 ஸ்பூன், உளுந்து 2 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், அரிசி 2 ஸ்பூன், வரமிளகாய் 3, இந்த பொருட்களை எல்லாம் போட்டு எண்ணெய் எதுவும் ஊற்றாமல் டிரையாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் கருகாமல் வறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொடியை ஒரு சின்ன கிண்ணத்தில் ஊற்றி, கொஞ்சமாக தண்ணீர்(1/4கப் தண்ணீர்) ஊற்றி அப்படியே விழுதாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சாம்பார் செய்முறை

முதலில் குக்கரில் 1/2 கப் அளவு துவரம் பருப்பை போட்டு, அது முழுகும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் – 1/4 கால் ஸ்பூன் போட்டு, எண்ணெய் – 1 ஸ்பூன் விட்டு, 4 விசில் விட்டு சரியான பக்குவத்தில் வேக வைத்து கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வர மிளகாய் 2 கிள்ளி போட்டு, தாளித்து தேவையான காய்கறிகளை இந்த எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு உங்கள் விருப்பம் தான் காய்கறிகளை இரண்டு நிமிடம் போல வதங்கி வந்த உடன், 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

அதன்பிறகு இதில் நறுக்கிய சின்ன வெங்காயம் 10 பல், நறுக்கிய தக்காளி பழம் 2, அரைத்து, தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் மசாலா விழுது, வேக வைத்திருக்கும் துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை, இவைகளை எல்லாம் போட்டு நன்றாக கலந்து விட்டு சாம்பாரை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு மூடி போட்டு கொதிக்க வையுங்கள்.

10 நிமிடத்தில் காய் வெந்து இருக்கும். சாம்பாரும் நன்றாக கொதித்து இருக்கும். இறுதியாக சின்ன நெல்லிக்காய் அளவு புளி கரைசலை, இதில் ஊற்றி மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லி தழையை தூவினால் சூப்பரான சாம்பார் தயார்.

- Advertisement -

சுட சுட இட்லி மீது வாத்து மேலே ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு, சாப்பிட்டுப் பாருங்கள். அருமையாக இருக்கும். உங்களுக்கு காய், வெங்காயம், தக்காளி இவைகளை வேக வைக்க நேரமில்லை என்றால் இந்த சாம்பாரை குக்கரில் தாளித்து மூடி போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். வழக்கம் போல வெங்காயம் தக்காளியை எண்ணெயில் வதக்கி வைக்கக் கூடாது. இந்த சாம்பாருக்கு தண்ணீரில் வேகும் போது தான் சுவை அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மீல்மேக்கரை வைத்து கறி குழம்பின் சுவையிலே அருமையான இந்த கிரேவியை ஒரு முறை செஞ்சு பாருங்க. பத்து நிமிஷத்துல இவ்வளவு டேஸ்ட்டான ஒரு கிரேவியை செய்யவே முடியாது.

உங்களுக்கு தேவை என்றால் இறுதியாக இதில் சிறிது வெள்ளம் சேர்த்துக் கூட பரிமாறலாம் அதுவும் உங்களுடைய விருப்பம். நாம் வைக்கக்கூடிய இட்லி டிபன் சாம்பார் போல இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஒரே ஒருமுறை இப்படியும் உங்க வீட்டு இட்லிக்கு சாம்பார் வைத்துப் பாருங்கள் ரெசிபி சூப்பரா இருக்கும். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

- Advertisement -