இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா 100 சப்பாத்தியை கூட அசால்டா செஞ்சு முடிச்சிடலாம். அட! இத்தனை நாள் இது தெரியாம இவ்வளவு கஷ்டப்பட்டுட்டோமே அப்படின்னு கண்டிப்பா நினைப்பீங்க.

chapthi potato
- Advertisement -

பெண்களுக்கு எப்பொழுதுமே வேலை இருந்து கொண்டே இருக்கும். வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். அப்படி நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் நாளெல்லாம் செய்வதை காட்டிலும் சில சின்ன சின்ன டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டால் அந்த வேலைகளை எல்லாம் சீக்கிரத்தில் முடித்து விடலாம். உங்களின் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தி மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

சப்பாத்தி சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் சப்பாத்திக்கு மாவு பிசைவதை யோசிக்கும் போது வேறு ஏதாவது டிபன் செய்து விடலாம் என்று மனதை மாற்றிக் கொள்வோம். இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும் இனி எப்ப சப்பாத்தி சாப்பிடணும்னு நினைச்சாலும் நிமிஷத்துல செஞ்சிடலாம். ஒரு மிக்ஸர் ஜாரில் முதலில் ஜானை சுற்றி நல்லா எண்ணெய் தேய்ச்சுக்கோங்க. அப்புறம் ஒரு கப் கோதுமை மாவு கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு ஒரு கப் கோதுமை மாவுக்கு அரை கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் கால் கப் தண்ணீர் மட்டும் ஊற்றி மிக்ஸி ஜாரின் மூடி இரண்டு முறை பல்ஸ் மோடில் விட்டு எடுங்கள். அதன் பிறகு கால் கப்பில் இருந்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மறுபடியும் ஒரு ரெண்டு அல்லது மூன்று முறை மட்டும் பல்ஸ் மோடில் அரைத்து எடுத்தால் கையால் பிசைவதை விட சாப்டான சப்பாத்தி மாவு கிடைக்கும். இந்த டிப்ஸ் உங்க எல்லாருக்குமே யூஸ்ஃபுல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அதே போல் சப்பாத்தியை சுட்டு எடுத்தவுடன் உடனே அதை பாயில் பேப்பர் அல்லது சில்வர் பேப்பரில் சுற்றி வைத்து விட்டால் நீண்ட நேரம் சப்பாத்தி சூடாகவும் சாப்டாகவும் இருக்கும். சமைக்கும் போது சில சமயம் நாம் கவனக்குறைவால் குக்கர் அடிப்பிடித்து கருகி விடும். அது போன்ற சமயங்களில் நன்றாக புளித்த மோரை இரவு முழுவதும் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் காலையில் தேய்த்து பாருங்கள் அடிப்பிடித்த கறை முழுவதுமாக நீங்கி விடும்.

உருளைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு அரைமணி நேரம் உப்புத் தண்ணீரில் போட்டு வைத்த பின்பு வேக வைத்தால் உடனே வெந்து விடும். சாம்பார் பொடி அரைக்கும் போது அதில் கொஞ்சம் கல் உப்பை சேர்த்து பின்பு அரைத்து பாருங்கள். சாம்பார் பொடி நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும் பூச்சி வந்து வைக்காமலும் இருக்கும்.

- Advertisement -

சாம்பாருக்கு பருப்பை வேக வைக்கும் போது அதில் ஒரு துண்டு தேங்காயை போட்ட பிறகு வேக வைத்து பாருங்கள். பருப்பு சீக்கிரம் வெந்து விடும். அதே போல் பருப்பு வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்து கிடைப்பதுடன் குக்கரில் பொங்கி வழியாமலும் இருக்கும்.

வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்று எது சமைப்பதாக இருந்தாலும் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்துப் பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். அதே போல் வெல்லத்தை தட்டி சேர்ப்பதற்கு பதிலாக நாம் காய் செய்வோம் செய்வதில் கொஞ்சம் பெரிய தொலைவில் இருக்கும் பக்கம் வெள்ளத்தை துருவிய பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள் வேலை சுலபமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுபிசுப்போடு இருக்கும் உங்க வீட்டு ஸ்டவ்வை, ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றாமல், 5 நிமிடத்தில் பளிச்சு பளிச்சென மாற்றலாம். இதோ ஒரு சூப்பர் ஐடியா.

இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்கு தெரிந்தால் போதும் நாளெல்லாம் சிரமப்பட்டு செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரத்தில் முடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -