இனி சூப்பரான கெட்டித்தயிர் வாங்க கடைக்கு போக வேண்டாம். நம் வீட்டிலும் கடை தயிர் போலவே, கெட்டித் தயிரை உறை போடலாம். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

curd

நம்முடைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் முக்கியமான குறிப்புகளை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் கடையில் விற்பது போலவே சுவையான கெட்டித் தயிரை நம் வீட்டில் எப்படி உறை போடுவது என்பதை பற்றியும், நம் வீடுகளில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ஃபிளாஸ்கிற்கு உள் பக்கம் வாடை வராமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றியும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் இருக்கும் வாடையை எப்படி நீக்குவது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படித்து பயன்பெறுங்கள்.

curd

Tip No 1:
நம் வீட்டில் தயிரை உறை போட்டால் கெட்டியாக வராது. ஒன்று புளித்த வாடை அடிக்கும். இல்லை என்றால் தயிர் நீர்த்துப் போகும். ஸ்பூனில் அள்ளினால் அப்படியே சாப்பிடும் அளவிற்கு, சுவை கடை தியிருக்கு தான் உண்டு. லேசான இனிப்பு சுவையோடு புளிக்காத அப்படிப்பட்ட தயிரை நம் கையாலும், நம் வீட்டிலும் உறை போடலாமே. சிம்பிள் டிப்ஸ் இருக்கு.

முதலில் பாலை நிறைய தண்ணீர் ஊற்றாமல் ஒரு டம்ளர் அளவு பாலுக்கு 1/4 டம்ளர் தண்ணீர் மட்டும் ஊற்றி காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்தப் பாலை வெதுவெதுப்பான சூடு வரும் வரை ஆற வைக்க வேண்டும். ரொம்பவும் சூடு ஆறிவிட்டால், தயிர் நன்றாக உறையாது. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பாக இருக்கும் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு 250ml பாலுக்கு 2 டேபிள்ஸ்பூன் புளிக்காத கெட்டித் தயிரை உறை போட எடுத்துக்கொள்ள வேண்டும்.

curd

இந்த இரண்டு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிரை முதலில் ஒரு சிறிய டம்ளரில் ஊற்றி ஒரு ஸ்பூன் விட்டு கலந்து கட்டிகளை உடைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு தயாராக இருக்கும் பாலில், 2 டேபிள் ஸ்பூன் தயிரை உறை ஊற்றி விட்டு ஒரு கரண்டியை விட்டு நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு ஒரு தட்டை போட்டு மூடி 5 லிருந்து 6 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு சரியான பக்குவத்தில் கட்டி தயிர் கிடைக்கும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. ட்ரை பண்ணி பாருங்க. (அகலமான பாத்திரத்தில் முதலில் பாலை ஊற்றி விட்டு அதன் பின்புதான் உறை போட வேண்டும். உறை தயிரை ஊற்றி விட்டு, அதன்மேல் பாலை ஊற்றி கலக்கக்கூடாது.)

- Advertisement -

Tip No 2:
அடுத்தபடியாக நம்முடைய வீடுகளில் ஃபிளாஸ்க் கட்டாயம் இருக்கும். ஆனால் அடிக்கடி அதை பயன்படுத்த மாட்டோம். வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது, உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, மட்டும் தான் பயன்படுத்துவோம். பயன்படுத்தாத சமயத்தில் மூடி போட்டு வைத்திருக்கும் ஃபிளாஸ்க் உள்ளே ஒரு கெட்ட வாடை அடிக்க ஆரம்பிக்கும். பயன்படுத்தாத பிளாஸ்டிக்குக்கு உள்ளே 1/2 ஸ்பூன் அளவு வெள்ளை சர்க்கரையை போட்டு மூடி வைத்துவிட்டால் கெட்ட வாடை எதுவும் இருக்காது. ஃபிளாஸ்கை பயன்படுத்தும்போது சர்க்கரையை வெளியே கொட்டிவிட்டு ஒரு முறை கழுவிவிட்டு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

flask

Tip No 5:
நம் வீட்டு சமையல் அறையில் ஊறுகாய் போட்டு வைத்திருக்கும் டப்பா, வெங்காய வடகம் போட்டு வைத்திருக்கும் டப்பாவில், வாசனை மிகுந்த பொருட்களை போட்டு வைத்திருக்கும் டப்பாக்களில், எல்லாம், அந்த குறிப்பிட்ட பொருட்களின் வாசம் அப்படியே இருக்கும். என்னதான் தேய்த்து கழுவி, வெயிலில் உலர வைத்தாலும், மீண்டும் எடுத்து முகர்ந்து பார்க்கும் போது அந்த வாசம் வரத்தான் செய்யும்.

containers

இப்படிப்பட்ட டப்பாக்களில் வேறு ஒரு பொருட்களை கொட்டி நம்மால் பயன்படுத்தவே முடியாது. கண்ணாடி பாட்டிலாக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் டப்பாவாக இருந்தாலும் சரி. அதன் உள்ளே வீசும் வாடையை எப்படி நீக்குவது. ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்துக்கோங்க, அதை தண்ணீரில் நன்றாக நினைத்து விட்டு, லேசாக பிழிந்து விட்டு, காலியான டப்பாவில் போட்டு மூடி விடுங்கள்.

tissue

ஒரு டப்பா விற்கு இரண்டு டிஷ்யூ பேப்பர்களை நினைத்து போட்டால் போதும். அதன் பின்பு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம், ஈர டிஷ்யூ பேப்பர் அந்த டப்பா உள்ளேயே இருக்கட்டும். மேலே மூடி போட்டு அப்படியே விட்டு விடலாம். ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் கழித்து அந்த டப்பாவில் உள்ளே இருக்கும் டிஷ்யூ பேப்பரை வெளியே எடுத்துவிட்டு, அதன் பின்பு முகர்ந்து பாருங்கள் உங்களுடைய டப்பாவில் எந்த விதமான வாடையும் வீசாது.

இதையும் படிக்கலாமே
புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.