அசைவம் சமைத்த வாடையே தெரியாமல் நாள் முழுவதும் வீடு நறுமணத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கு இதோ 5 வழிகள்.

bad-smell
- Advertisement -

வீட்டை சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்திருப்பது வெறும் அழகுக்காக மட்டும் அல்ல. சுத்தம் என்பதில் தான் நம்முடைய ஆரோக்கியமும் அடங்கி இருக்கிறது. வீடு எப்பொழுதும் நல்ல நறுமணத்துடன் சுத்தமாக வைத்து இருந்தால் தான் நாமும் எப்போதும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்புடனும் இருப்போம். நல்ல ஆற்றலும் வீட்டை சுற்றி இருக்கும். ஆனால் நாம் என்ன தான் நாள் முழுவதும் பாடுபட்டு வீட்டை சுத்தம் செய்து நறுமணத்துடன் வைத்து இருந்தலும், அசைவம் சமைக்கும் நேரத்தில் சில நிமிடத்திலேயே அதன் வாடை தான் வீடு முழுவதும் இருக்கும். இனி அசைவம் சமைத்தாலும் அந்த வாடையே இல்லாமல் இருக்க இதோ ஐந்து வழிகள்.

1. சமையலுக்கு பயன்படுத்தாத ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். இந்த கடாயில் கால் பாகம் வரை தண்ணீரரை ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள், தண்ணீர் கொதிக்கும் போது அதில் சிறிதளவு கம்ஃபோர்ட் ஊற்றி விடுங்கள் போதும். பிறகு தண்ணீர் கொதிக்கும் போது அதில் வரும் கம்ஃபோர்ட் வாசனை தான் வீடு முழுவதும் வீசும்.

- Advertisement -

2. ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கல் உப்பு அல்லது ஆப்ப சோடா இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். ஆப்ப சோடாவுடன் சேர்த்து வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் டப்பாவை துளைகள் போட்ட மூடி போட்டு, மூடி விடுங்கள். (ஒரு கம்பியை அடுப்பில் சூடேத்தி மூடியில் சிறு சிறு ஓட்டைகள் போட்டுக் கொள்ளுங்கள். பின் அந்த மூடியை வைத்து டப்பாவை இறுக்கமாக மூடிவிடுங்கள்) உங்களுக்கு எங்கு இந்த நறுமணம் தேவையோ அந்த இடத்தில் இந்த டப்பாவை வைத்து விடுங்கள்.

3. ஒரு எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் அதை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள், அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதை துர்நாற்றம் வீசும் இடத்தில் தெளித்து நன்றாக துடைத்தால் துர்நாற்றம் வீசக்கூடிய இடம் நறுமணமாக மாறிவிடும்.

- Advertisement -

4.ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கொள்ளுங்கள். அதில் கால் டம்ளர் அளவிற்கு கல் உப்பை கொட்டி விடுங்கள். பிறகு அதில் கால் மூடி அளவுக்கு கம்ஃபோர்ட் ஊற்றி விடுங்கள். இது இரண்டையும் நன்றாக கலந்த பின் ஐந்து அல்லது ஆறு கிராம்புகளை இதன் மேல் போட்டு கண்ணாடி டம்ளரை ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது நெட்டட் கிளாத் வைத்து மூடி விடுங்கள். இல்லை என்றால் ஒரு கனமான பேப்பரை வைத்து ரப்பர் பேண்ட் போட்டு மூடி, அதன் மேல் ஒரு குண்டுசியை வைத்து ஓட்டைகளை போட்டு விடுங்கள். அதன் வழியே நறுமணம் வெளிவரும்.

5. ஒரு ஸ்வீட் பாக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள், அந்த பாக்ஸில் பாதி அளவிற்கு வருவது போல் கொஞ்சம் பஞ்சை எடுத்துக் கொள்ளுங்கள் (அதாவது தண்ணீர் துடைக்க பயன்படுத்தும் ஸ்பான்ச்). ஒரு கிண்ணத்தில் அரை கிளாஸ் தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் சிறிதளவு கம்ஃபோர்ட், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் அதில் சேர்த்து விடுங்கள். முதலில் பாக்ஸில் கொஞ்சம் கம்ஃபோர்ட் கலந்த தண்ணீர் ஊற்றி, அதன் மேல் இந்த பஞ்சை வைத்து மீதம் இருக்கும் தண்ணீரை பஞ்சின் மேல் முழுவதும் ஊற்றி விடுங்கள். இந்த பாக்ஸின் மூடியில் ஏதாவது ஒரு இடத்தில் கொஞ்சம் பெரிய ஓட்டையை போட்டு மூடி விடுங்கள். அதன் வழியாக ஸ்பாஞ்சில் ஊறி இருக்கும் கம்போர்ட் தண்ணீரின் நறுமணம் வெளியே வீசும். இதில் எதாவது ஒரு முறையை பயன்படுத்தி உங்கள் வீட்டை நல்ல நறுமணம் மிக்கதாக மாற்றி விடுங்கள்.

- Advertisement -