இந்த விஷயம் தெரிந்தால், குப்பைத்தொட்டியில் போட்ட இந்த பொருளை எல்லாம் ஓடிப்போய் திரும்பவும் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவீங்க.

kitchen-tips
- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய சமையல் அறையில் நாம் தேவையில்லை என்று குப்பையில் தூக்கிப் போடக்கூடிய நிறைய பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். அந்த வரிசையில், நாம் நம் வீட்டு சமையலறையில் தூக்கி குப்பையில் போடும் ஒரு சில பொருட்களை மீண்டும் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். விற்கும் விலைவாசிக்கு எதையும் வீணடிக்க கூடாது. கூடுமானவரை குப்பையில் போடும் பொருட்களை ஆரோக்கியமாக எப்படி பயன்படுத்தலாம் என்று நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

காலிஃப்ளவர்:
பொதுவாகவே காலிஃப்ளவருக்கு மேலே இருக்கும் அந்த பூக்களை மட்டும் தான் சமையலுக்கு பயன்படுத்துவோம். அதற்கு கீழே இருக்கும் தண்டை எல்லாம் வெட்டி குப்பையில் தான் போடுவோம். அந்த தண்டுகளை எல்லாம் வெட்டி சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். காலிஃப்ளவரை ஒருநாள் சமைக்கலாம். இந்த தண்டை தனியாக சமைக்கலாம். வெஜிடபிள் குருமா, வெஜிடபிள் பிரியாணி, புலாவ் என்று நீங்கள் எதை செய்தாலும் அதில் இந்த காலிபிளவர் தண்டை போட்டு செய்து பாருங்கள் சுவையில் எந்த வித்தியாசமும் தெரியாது.

- Advertisement -

ஆரஞ்சு பழத்தோல், எலுமிச்சை பழத்தோல்:
இந்த இரண்டு வகையான பழ தோல்களையும் வெயிலில் நன்றாக காய வைத்து மிக்ஸி ஜாரில் பொடி செய்து அரைத்து வைத்துக் கொண்டால், முகத்துக்கு பேஸ் பேக் போட பயன்படுத்தலாம். இன்னும் சில அழகு குறிப்புக்கு பயன்படுத்தலாம். அதை தவிர இந்த பொடியை வேறு எப்படி பயன்படுத்தலாம். (அரைத்த இந்த பொடியை ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு மாதம் கெட்டுப்போகாது).

லெமன் சாதம் செய்வதற்கு லெமன் இல்லை என்றால், எண்ணெய் ஊற்றி வழக்கம் போல கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு தாளித்து எலுமிச்ச பழச்சாறு ஊற்றுவோம் அல்லவா. அந்த நேரத்தில் மிகக் குறைந்த அளவு இந்த எலுமிச்சம் பழத்தோல் பொடியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் போல கலந்து விட்டு, இந்த கலவையை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். எலுமிச்சம் பழம் சாதம் சுவையில் தோற்கும்.

- Advertisement -

ஃபில்டர் காபித்தூள்:
பில்டர் காபி போட்ட பின்பு அந்த காபி தூளை தூக்கி குப்பையில் தான் கொட்டுவோம். அதை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். காயவைத்த அந்த காபி தூளை மெல்லிசான காட்டன் துணியில் வைத்து ரப்பர் பேண்ட் போட்டு, சின்ன சின்ன முடிச்சாக கட்டி ஷூ ராக், கபோர்ட்டில் வைத்தால் அந்த இடம் ரொம்ப ரொம்ப வாசமாக இருக்கும். மெல்லிசான காட்டன் துணி இல்லை என்றால் மாஸ்க் துணியில் கூட இதை போட்டு கட்டி வைக்கலாம்.

புதினா காம்பு:
புதினாவை கிள்ளி விட்டு காம்பு பகுதிகளை குப்பையில் தூக்கி போட்டு விடுவோம். ஒரு வாட்டர் கேனில் தண்ணீர் ஊற்றி நிரப்பி, காம்பின் கீழ் பகுதி, அந்த தண்ணீரில் இருக்கும்படி வையுங்கள். இரண்டு நாளில் அந்த காம்பில் வேர்விடும். இந்த வேர் பகுதியை மண்ணில் புதைத்து வைத்தால் புதினா செடி கடகடவென தழைத்து வளரும்.

- Advertisement -

கொத்தமல்லி தழை வேர்ப்பகுதி:
கொத்தமல்லி தழை கீழே இருக்கும் வேர்ப்பகுதியை வெட்டி அப்படியே குப்பையில் போடுவோம். ஆனால் அதில் எவ்வளவு கொத்தமல்லி தழை தண்டு வீணா போகும் தெரியுமா. இப்படி மண்ணோடு இருக்கும் வேர் பகுதியை சுத்தமாக கழுவி விடுங்கள். நான்கு, ஐந்து முறை மண் போக கழுவி விட்டு, சிறிது நேரம் உப்பு தண்ணீரில் இந்த வேர் பகுதியை போட்டு ஊற வைத்து கழுவி, மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். (வெள்ளை நிறத்தில் வேர் இருக்கும் அல்லவா. அதை மட்டும் வெட்டி தான் கீழே போட வேண்டும் மற்றதை எல்லாம் சமைக்க பயன்படுத்தலாம்).

கழுவி சுத்தம் செய்த கொத்தமல்லி தழை தண்டுப் பகுதியை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டுகொள்ள வேண்டும். இதோடு 10 முந்திரி பருப்பு, ஏலக்காய் 2, பட்டை 1 துண்டு, பச்சை மிளகாய் 5 லிருந்து 6, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கருவேப்பிலை ஒரு கொத்து நறுக்கிய வெங்காயம் 1, போட்டு இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் போட்டு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் போட்டு, விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம் செய்முறை விளக்கம்

நன்றாக வதக்கி விட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும்  விழுதை இதோடு ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இந்த கிரேவியில் 1/4 கிலோ அளவு சிக்கன் துண்டுகளை போட்டு, நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு வேகவைத்து எடுத்தால் சூப்பரான சிக்கன் கிரேவி ரெடி. இட்லி தோசை சப்பாத்தி ரொட்டிக்கு செம்ம சைடிஸ் இது. இதுவே நீங்கள் சைவமாக இருந்தால் இதே ரெசிபியை பன்னீர் வைத்து முயற்சி செய்து பார்க்கலாம். குப்பையில் தூக்கி போடக்கூடிய இந்த பொருட்களை எல்லாம் கூட பயனுள்ளபடி எப்படி மாற்றுவது என்று தெரிந்து கொண்டோமா. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -