அஞ்சே நிமிஷத்துல கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம் ரெடி பண்ணிடலாம். இனி இதுக்கு அரிசி ஊற வைத்து அரைத்து எல்லாம் கஷ்டப்படவே வேண்டாம் நெனச்ச உடனே செஞ்சு சாப்பிடலாம்.

unniyappam Recipe
- Advertisement -

இனிப்பு வகைகளில் நாம் செய்யும் குழிப்பணியாரத்தை போலவே கேரளாவில் இன்னும் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான உணவு தான் இந்த உண்ணியப்பம். இதை பாரம்பரியமான முறையில் செய்வதென்றால் அரிசியை ஊற வைத்து அரைத்து அதன் பிறகு தான் செய்வார்கள். ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த ஸ்பெஷல் உண்ணியப்பத்தை அதே பாரம்பரிய சுவையுடன் ஐந்தே நிமிடத்தில் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த உண்ணியப்பம் செய்வதற்கு முதலில் இரண்டு பெரிய பழுத்த வாழைப் பழங்களை எடுத்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அதில் அரை கப் அரிசி மாவு, ரெண்டு டேபிள் ஸ்பூன் ரவை, இரண்டு டேபிள் ஸ்பூன் மைதா, கால் டீஸ்பூன் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு என அனைத்தையும் சேர்த்து அதை அப்படியே வைத்து விடுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் பாகு வெல்லம் சேர்த்து அத்துடன் அரை கப் தண்ணீரையும் ஊற்றி வெல்லம் தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகு இறக்கி விடுங்கள். இதற்கு பாகு பதம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

அடுத்ததாக காய்ச்சிய வெல்லப்பாகை ஏற்கனவே நாம் எடுத்து வைத்த மாவுகளில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கால் கப் பொடியாக நறுக்கிய தேங்காய், ஒரு ஸ்பூன் கருப்பு எள், ஒரு பின்ச் சமையல் சோடா இவை அனைத்தையும் சேர்த்து இன்னும் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். உண்ணியப்பம் செய்வதற்கான மாவு தயாராகி விட்டது.

இப்போது அடுப்பில் பணியார சட்டி வைத்து சூடானவுடன் அதில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றிய பிறகு தயார் செய்து வைத்த மாவை பணியார குழியில் ஊற்றி தட்டு போட்டு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து வேக விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மறுபக்கம் திருப்பி போட்டு நன்றாக சிவந்து வந்தவுடன் எடுத்து விடலாம்.

கேரள ஸ்பெஷல் உண்ணியப்பம் ரொம்பவே சுலபமா ரெடி பண்ணியாச்சு. இது குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் மாலை நேரத்தில் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் ரொம்பவே நல்லா இருக்கும்.

- Advertisement -