தலையில் இருந்து ஒரு முடிகூட உதிர்ந்து கீழே விழாமல் இருக்க, கீழாநெல்லி போதும். அது மட்டும் இல்லைங்க 40 வயதைக் கடந்தாலும் நரை முடி எட்டிப் பார்க்காது.

hair12
- Advertisement -

தலைமுடி உதிர்வை ஒரு சில நாட்களிலேயே தடுத்து நிறுத்தி, முடி அடர்த்தியாக வளர செய்ய இந்த கீழாநெல்லி செடி ஒன்று போதும். வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர தொடங்கும். அதேசமயம் இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நரை முடி வருவது 40 வயதிலும் தள்ளிப்போகும். தலை முடி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க கீழாநெல்லி செடியை முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

மருத்துவ குணம் நிறைந்த இந்த கீழாநெல்லியை பற்றி பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். உங்கள் வீட்டின் அருகில் இந்த செடி வளர்த்து இருந்தால் அதை பறித்து வந்து இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டின் அருகில் இந்த செடி இல்லை. கிடைக்காது என்று சொல்லுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். கீழாநெல்லி செடியின் வேர் இலை இரண்டுமே நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

முதலில் கீழாநெல்லிச் செடியை வேரோடு பறித்து வீட்டிற்கு எடுத்து வாருங்கள். வேரை வெட்டி எடுத்து அதில் இருக்கும் மண்ணை எல்லாம் கழுவி விட்டு, வேரை ஈரம் இல்லாமல் காய வைத்து கொள்ள வேண்டும். கீழாநெல்லி இலையும் நமக்கு தேவைப்படும். அதையும் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200ml அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 25 கிராம் அளவு கீழாநெல்லி வேரை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு எண்ணெயை நன்றாக காய வைக்க வேண்டும். வேரை நன்றாக ஒரு சிறிய உரலில் போட்டு நசுக்கி அதன் பின்பு எண்ணெயில் போட்டால் வேரில் இருக்கும் சத்து உடனே எண்ணெயில் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எண்ணெய் வேரோடு 10 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்பு, 20 கிராம் அளவு கீழாநெல்லி இலையை அந்த எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விடுங்கள். எண்ணெயின் அந்த சூட்டிலேயே, இலையில் இருக்கும் சாறு அனைத்தும் எண்ணெயில் இறங்கட்டும். இந்த எண்ணெயை நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி அதன் பின்பு ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் எண்ணெயை சாதாரணமாக தலையில் தினம்தோறும் வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதை தலையில் வைத்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. தினமும் உங்களுக்கு தலையில் எண்ணெய் வைக்க கூடிய பழக்கம் இல்லை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள், இரவு இந்த எண்ணெயை உங்களுடைய தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து விட்டு, அடுத்த நாள் காலை எழுந்து தலைக்கு குளித்து விடலாம். இப்படி இந்த கீழாநெல்லி எண்ணெயை தலைக்கு தேய்த்து வர முடி அடர்த்தியாக கருப்பாக வளர தொடங்கும். குறிப்பாக முடி உதிர்வு 15 நாட்களில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சிலபேர் முடி சீக்கிரம் உதிர்வதை கட்டுப்படுத்த, சீக்கிரம் அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக, அளவே இல்லாமல் நிறைய வேர், நிறைய இலைகள், எடுத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி விடுவார்கள். அப்படி செய்யக்கூடாது. நாம் போடக்கூடிய மூலிகை பொருட்களின் அளவு கொஞ்சம் கூடும் போது சில சமயம் எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணிவிடும். அதாவது முடி உதிர்வு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே மேலே சொன்ன அளவுகளை முறையாக பின்பற்றி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக தலை முடி வளர்ப்பதில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -