சமையலறையிலேயே நாளெல்லா வீணாகி விடுகிறதா? கவலை வேண்டாம், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் சூப்பரான 10 கிச்சன் டிப்ஸ்

kitchen tips tamil
- Advertisement -

இல்லத்தரசிகளான பெண்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை, தங்களின் குடும்பத்திற்காக உணவு சமைக்க சமையலறையில் செலவிடுகின்றனர். சில சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வதால் பெண்களின் சமையலறை பணி சுமை குறையும். அத்தகைய சில சமையல் குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சமையலறையில் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைக்கும் பொழுதோ அல்லது காய்கறிகள், பாஸ்தா போன்றவற்றை தண்ணீரில் வேக வைக்கும் பொழுதா, அந்த பாத்திரத்தின் மீது ஒரு தட்டை கொண்டு மூடி வேக வையுங்கள். இப்படி செய்வதால் காய்கறிகள், பாஸ்தா போன்றவை மிக விரைவில் நன்கு வெந்து விடும். அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கும் பொழுது, பாத்திரத்தின் மீது ஒரு தட்டை கொண்டு மூடி கொதிக்க வைப்பதால் மிக விரைவாக தண்ணீர் கொதித்து விடும். அதே நேரத்தில் சமையல் எரிவாயுவும் மிச்சமாகும்.

- Advertisement -

சில பேர் வீடுகளில் தேன் வாங்கி வைத்திருப்பார்கள். அந்த தேனை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அது கட்டிவிடும். தேன் மீண்டும் சரியான பதத்திற்கு வர தேன் புட்டியை சூடான தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் கட்டிப் போன தேன் நீர்ம பதத்திற்கு வரும். தேன் கட்டிப் போகாமல் இருக்க வீட்டினுள் சூரிய ஒளி படாத, குளிர்ச்சியான பகுதியில் தேன் பாட்டிலை வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தேன் பாட்டிலை குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கக் கூடாது.

பால், தேனீர், காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் பொழுது, அதில் சர்க்கரை சேர்த்தால், அது முழுமையாக கரையாமல் பாத்திரத்தின் அடியிலேயே தங்கிவிடும். இதை தவிர்க்க சம அளவு சர்க்கரை மற்றும் சம அளவு தண்ணீரை ஒரு வாணலியில் போட்டு மிதமான வெப்பத்தில் வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

சர்க்கரை கட்டிப் போகாமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சர்க்கரை அந்த தண்ணீரில் முழுவதுமாக கரைந்து ஒரு ஸ்வீட் ஸிரப் பதத்திற்கு வரும். இந்த சர்க்கரை ஸ்வீட் ஸிரப்பை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பால், தேநீர், குளிர்பானங்களில் சேர்த்து அருந்தலாம்.

பேக்கிங் முறையில் சமைக்கப்படும் உணவு பண்டங்களான பிஸ்கட்டுகள், கேக்குகள் போன்றவை ஒரு வாரம் வரை கெடாமல் இருக்க காற்று போகாத ஏர் டைட் பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு அவற்றை பத்திரப்படுத்த வேண்டும். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு போன்ற பருப்புகள் கெட்டுப்போகாமல் இருக்க, அந்த பருப்பு வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியான காற்று போகாத ஏர் டைட் பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு, உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் வைத்து விட வேண்டும். இப்படி செய்ததால் அந்த பருப்பு வகைகள் குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை கெட்டு போகாமலிருக்கும்.

- Advertisement -

சமையலுக்காக நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகள் மீதமிருந்தால் ஒரு குளிர்ந்த நீர் நிறைந்த பாத்திரத்தில், அந்த உருளைக்கிழங்கு துண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் படி போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைத்தால் உருளைக்கிழங்கு துண்டுகள் கெடாமல் இருக்கும். உங்களுக்கு எப்போது தேவையோ அப்பொழுது அந்த உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து சமைத்து சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு பவுடர் டப்பா வாங்கினா போதும், வீடு மொத்தமே பளிச்சுன்னு மாறிடும்.

இஞ்சியை தோல் உரிப்பதற்கு சிலர் கத்தியை பயன்படுத்துவார்கள். இப்படி கத்தியை கொண்டு இஞ்சியை தோல் சீவும் பொழுது, இஞ்சியின் சதைப்பகுதிகளும் அந்த தோலுடன் சேர்ந்து வந்து வீணாகிவிடும். இதை தவிர்க்க ஒரு டீஸ்பூன் எடுத்து இஞ்சியின் மேற்புற தோல்பகுதிகளின் மீது லேசாக உரசி வந்தாலே, இஞ்சியின் தோல் மட்டும் நீங்கி, இஞ்சி வீணாவது தடுக்கப்படும்.

- Advertisement -