சனி குருவின் வக்ர நிபர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள்

guru sani
- Advertisement -

ஒரு கிரகம் வக்கிரமாக இருக்கும்பொழுது அந்த கிரகத்தால் பல பாதிப்புகள் ஏற்படும். இதே அந்த கிரகம் வக்ர நிவர்த்தி ஆன பிறகு அதனால் பல நன்மைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக சனி மற்றும் குருவின் வக்ர நிவர்த்தி என்பது பல ராசிக்காரர்களுக்கு நன்மையை தரக்கூடியதாக திகழ்கிறது. இந்த ஜோதிடம் குறித்த பதிவில் 2024 ஆம் ஆண்டு சனி மற்றும் குரு பகவானால் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களில் நீதிமானாக செயல்படக்கூடியவர் சனீஸ்வர பகவான். இவர் கடவுள் மக்கள் என்ற பாரபட்சம் இன்றி அனைவருக்கும் அவர்களின் பாவ புண்ணியங்கள் ஏற்றவாறு பலன்களை வாரி வழங்கக் கூடியவராக திகழ்கிறார். அப்படிப்பட்ட சனி பகவான் நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைந்து விட்டார். நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதக் கூடியவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட அவர் பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகமாக ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு பகவான் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இப்படி இருவரும் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிகளுக்கு யோகம் அதிகரிக்கும்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குரு பகவானால் பல நன்மைகள் ஏற்படப்போகிறது. அதிலும் குறிப்பாக இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும் காலமாக திகழப் போகிறது. தங்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் தேடிவரும் காலமாக அமைகிறது. மேலும் இதுவரை வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தவர்களுக்கு கை நிறைய வருமானம் கிடைக்கும் காலமாக திகழப்போகிறது.

- Advertisement -

வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலையும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் அனைவரும் விரும்பி வந்து உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைத்து தொழிலை மேலும் முன்னேற்றி வாழ்க்கையில் உயரிய நிலையை அடைவீர்கள்.

மிதுனம்

- Advertisement -

மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 குரு மற்றும் சனி பகவானால் அதிர்ஷ்டமான ஆண்டாக திகழப்போகிறது. பணரீதியாக ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு என்பது அதிகரிக்கும். அதேபோல் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகி கணவன் மனைவிக்கிடையே அன்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கும். சரியான நேரத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அதனால் எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த அவப்பெயர்கள் அனைத்தும் நீங்கி மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு குரு மற்றும் சனியின் உதவியால் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக திகழப்போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் அனைத்தும் விரும்பி வந்து சேர்வர். அதனால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு ஏற்பட்டு திக்கு முக்காட செய்யும்.

இதனால் பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வேலை மற்றும் தொழிலில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். எந்த அளவுக்கு உங்களுடைய உழைப்பை மூலதனமாக செலுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு லாபத்தை கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள்.

இதையும் படிக்கலாமே: டிசம்பர் மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

தங்கள் ஜாதகத்தை பார்த்து அதற்கேற்றபடி பரிகாரங்களை செய்வதன் மூலம் மேலும் நல்ல பலன்களை அடைய முடியும்.

- Advertisement -